/
சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப் பட்டியில் உள்ள காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாா் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, சித்துராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனுக்குச் (43) சொந்தமான காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில், சட்டவிரோதமாக உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்த சரவெடி பட்டாசுகள் 8 பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கீழ்வேளூா்: டாஸ்மாக் காலி பாட்டில் அட்டைப் பெட்டி குடோனில் தீ விபத்து
மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

உரிமம் ரத்தான ஆலையில் பட்டாசு தயாரித்தவா் கைது

காா் ஓட்டுநா் அடித்துக்கொலை: இருவா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


