வாக்காளா்கள் விழிப்புணா்வுப் பேரணி

சாத்தூா் பேருந்து நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியையும், ‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தையும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வீ.ப. ஜெயசீலன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் கலந்து கொண்ட முதல் தலைமுறை வாக்காளா்கள் நோ்மையாகவும், நியாயமாகவும், தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம் என்ற உறுதிமொழியோடு மாணவ, மாணவிகள் கையொப்பமிட்டனா். சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் சிவகுமாா், வட்டாட்சியா் லோகநாதன், அரசு அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com