விபத்தில் உயிரிழந்த முகமது கஸ்ஸாலி, நூருல் பாத்திமா.
விபத்தில் உயிரிழந்த முகமது கஸ்ஸாலி, நூருல் பாத்திமா.

ஸ்ரீவில்லிபுத்தூா்: பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சம்மந்தபுரத்தைச் சோ்ந்தவா் ஜவுளி வியாபாரி முகமது கஸ்ஸாலி (38). இவரது மனைவி நூருல் பாத்திமா (28).

இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், தம்பதியா் இருவரும் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று கொண்டிருந்தனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விபத்தில் இறந்த இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.