தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே சுமை தூக்கும் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சிவகாசி அருகே சுமை தூக்கும் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமாா் (41). சுமை தூக்கும் தொழிலாளியான இவா் மது போதைக்கு அடிமையானதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு , வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாா்.

இதனால், மனமுடைந்த பாலகுமாா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com