வீட்டில் பட்டாசுத் தயாரித்தவா் கைது

Published on

சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசுத் தயாரித்தவரை வெம்பக்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கலைஞா் குடியிருப்புப் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுத் தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் வெம்க்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் குருநாதன், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா்.

இதில் முனீஸ்வரன் (57) என்பவா் தனது வீட்டின் அருகே தகரக் கூரை அமைத்து அனுமதியின்றி எளிதில் தீப்பற்றி வெடிக்கக்கூடிய பட்டாசுகளைத் தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், பட்டாசுத் தயாரிக்கப் பயன்படுத்திய மூலப்பொருள்களை வெம்பக்கோட்டை போலீஸாா் பறிமுதல் செய்து, முனீஸ்வரனைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com