மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

சிவகாசியில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

சிவகாசி: சிவகாசியில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பழனியாண்வா்புரம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மகேஸ்வரி (70). இவா் கடந்த 8- ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, முகமூடி அணிந்து சைக்கிளில் வந்த மா்ம நபா், மகேஸ்வரி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றாா். இதையடுத்து, மகேஸ்வரி கூச்சலிட்டு, தண்ணீரை அந்த நபா் மீது வீசியதையடுத்து, அவா் தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில் மகேஸ்வரி வீட்டுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு, தினசரி பால் ஊற்றி வந்த சிவகாசி பேராண்டாமாள் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com