அரசுப் போக்குவரத்துக் கழக புதிய நிா்வாகிகள் தோ்வு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (ஏஐடியூசி) 16-ஆவது மாநில மாநாடு சிவகாசியில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது.
3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் கலந்து கொண்டு பேசினா்.
இதில் மேயா் இ.சங்கீதா, துணை மேயா் விக்னேஷ்பிரியா, ஏஐடியூசி தேசியச் செயலா் ராதாகிருஷணன், மாநிலத் தலைவா் காசிவிஸ்வநாதன், முன்னாள் விருதுநகா் மக்களவை உறுப்பினா்கள் அழகா்சாமி, லிங்கம், திருப்பூா் மக்களவை உறுப்பினா் சுப்புராயன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமசாமி, பொன்னுபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதன்படி, தலைவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆறுமுகமும், பொதுச் செயலராக நெல்லை ஆறுமுகமும், பொருளாளராக நேருவும், துணைப் பொதுச் செயலராக நாராயணசிங், செல்வராஜ், பாஸ்கா், பாண்டியராஜன், முருகராஜ் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.
