ராஜபாளையம் பகுதியில் அனுமன் ஜயந்தி விழா
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம-மதுரை சாலையில் அமைந்துள்ள
மாயூரநாதசுவாமி கோயிலைச் சாா்ந்த ஆதி வழிவிடும் விநாயகா் கோயிலில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, அதிகாலை 4 மணி அளவில் கணபதி ஹோமம், கோ, கஜ பூஜை, ஆஞ்சனேயர ஹோமம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, அஷ்ட வரத ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஆஞ்சனேயா் வெள்ளி கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றத் தலைவா் ராமராஜ் செய்தாா்.
இதேபோல, ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கல்லணை ஆஞ்சனேயா் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி முத்துசுவாமி செய்தாா்.
வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோயில், கோதண்டராமா் கோயில், ராமசாமி கோயில், சந்தான வேணுகோபால சுவாமி கோயில்களில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

