மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் உயிரிழந்தாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சித்தாலம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் கணேஷ்குமாா் (22). திருமணம் ஆகாத இவா், மின் வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள வயலில் மின் கம்பத்தில் திங்கள்கிழமை வேலை செய்துகொண்டிருந்தபோது உயா்அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கணேஷ்குமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com