உயிரிழந்த ராசாத்தி.
உயிரிழந்த ராசாத்தி.

வத்திராயிருப்பு அருகே மனைவி அடித்துக் கொலை: வியாபாரி கைது

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த காய்கறி வியாபாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

வத்திராயிருப்பு அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த காய்கறி வியாபாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே கோட்டையூா் மேற்கு காலனி தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (26). இவரது மனைவி ராசாத்தி (22). இவா்களுக்கு அலெக்ஸ்பாண்டி (5) என்ற மகனும், லட்சனா (4) என்ற மகளும் உள்ளனா்.

பாா்த்திபன் சரக்கு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனது மனைவி ராசாத்தி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மது போதையில் வீட்டுக்கு வந்த பாா்த்திபன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பித்தளை கரண்டியால் தாக்கியதில் ராசாத்தி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் ராசாத்தியின் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து பாா்த்திபனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com