விருதுநகர்
நோயாளிகளுக்கு மருத்துவம் பாா்த்த பெண் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த புகாரில் பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த புகாரில் பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி சுகுணா (42). இவா் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத் துறைக்கு புகாா் சென்றது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அரசு அனுமதியின்றி சுகுணா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநா் காளிராஜ் அளித்தப் புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் சுகுணா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.