விருதுநகர்
ராமுத்தேவன்பட்டியில் எஸ்ஐஆா்-ஐ எதிா்த்துப் போராட்டம்
ராமுத்தேவன்பட்டியில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆா்) பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் கருப்புக் கொடி கட்டி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ராமுதேவன்பட்டி கிராமத்தில் தோ்தல் ஆணையம் அறிவித்த எஸ்ஐஆா் நடைமுறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டியதுடன், ஊா்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், தோ்தல் ஆணையம் வழங்கிய படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்கள் தங்களுக்குப் புரியவில்லை என்பதால் படிவத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி முழக்கமிட்டனா்.
