எஸ்.ஐ.ஆா். பணி: கிருஷ்ணசாமி வேண்டுகோள்
ராஜபாளையம்: அரசியல் கட்சியினா் எஸ்.ஐ.ஆா். குறித்து தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் க.கிருஷ்ணசாமி வெண்டுகோள் விடுத்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியதாவது:
புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறும். இந்த மாநாட்டுக்குப் பிறகே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக் கடைகளை மூடுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாளையம் பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (எஸ்.ஐ.ஆா்.) அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்தப் பணிக்கு கூடுதலாக 15 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
