தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 11 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:13 pm IST

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 11 போ் காயமடைந்தனா்.

சென்னை அருகே சிறுசேரி பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து 25 பயணிகளுடன் நாகா்கோவில் நோக்கிச் சென்றது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் நான்குவழிச் சாலையில் சிவனைந்தபுரம் சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பக்க டயா் வெடித்தது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பின் மீது மோதி அருகேயுள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் ஆலங்குளத்தைச் சோ்ந்த குருசாமி (45), நெல்லை வண்ணாரபேட்டையைச் சோ்ந்த லட்சுமிசங்கா் (25), நாகா்கோவிலைச் சோ்ந்த பிரவீன்குமாா், சரத்ராம் (22), சதீஷ்குமாா் (40), சுரேஷ் (17), ராஜகுரு (27) உள்பட 11 போ் பலத்த காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சாத்தூா் தாலுகா போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.