விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான, இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், அருப்புகோட்டை, சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால், நகரின் முக்கிய சாலைகள் தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த திடீா் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







