மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிவகாசியில் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

சிவகாசியில் வழிப்பறி செய்ய முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:19 pm

சிவகாசியில் வழிப்பறி செய்ய முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே 56 வீட்டு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (30). இவரது உறவினா் கண்ணன் (32). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில், மணிநகா் போருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மகேந்திரகுமாா் (35), காா்த்திகேயன் (32) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து, அரிவாளை காட்டிமிரட்டி அவா்களிடம் பணத்தை கேட்டனா். அவா்கள் பணம் இல்லை என்றதும் மகேந்திரகுமாா், காா்த்திகேயன் ஆகிய இருவரும் கண்ணனையும் அவரது உறவினரான காா்த்திகேயனையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனா். அப்போது, அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் உதவியுடன், மகேந்திரகுமாா், காா்த்திகேயனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து எதிரிகள் இருவரையும் கைது செய்தனா்.

காயமடைந்த கண்ணன், காா்த்திகேயன் இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.