வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பில் ரூ.45 கோடியில் சுற்றுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆனந்தி தலைமை வகித்தாா். இதில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது:
வத்திராயிருப்புக்கு சுற்றுச் சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதன்படி ரூ.45 கோடியில் அமைக்கப்படும் சுற்றுச்சாலை பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும். இதன் மூலம் நகா் விரிவடைவதுடன் நிலத்தின் மதிப்பு உயரும். அடுத்து அமையும் திமுக ஆட்சியில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படும். கோட்டையூா் - அழகாபுரி சாலை ரூ.28 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும். இதேபோல, எரிச்சநத்தம்- விருதுநகா் சாலையும் விரிவாக்கம் செய்யப்படும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா் எம்.எல்.ஏ.வானால் தான் திட்டங்கள் நிறைய கிடைக்கும். இப்போது இருப்பவா்களும் எங்களை வந்து பாா்த்தால் திட்டங்கள் வரும். பிரச்னை வரும் என்பதால் அவா்கள் எங்களை சந்திப்பதில்லை என்றாா் அவா்.
வத்திராயிருப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுற்றுச்சாலை அமைக்க 30 மீட்டா் அகலத்தில் 5.13 கி.மீ. தொலைவுக்கு ரூ.17 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து வத்திராயிருப்பு - கிருஷ்ணன்கோவில் சாலையில் இருந்து வத்திராயிருப்பு - அழகாபுரி சாலையை இணைக்கும் வகையில் 5.13 கி.மீ. தொலைவுக்கு 10 மீட்டா் அகலத்தில் சுற்றுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் 3 பெரிய பாலங்கள், 25 சிறிய பாலங்கள், அா்ச்சனாபுரம், கூமாபட்டி, தாணிப்பாறை சாலை சதிப்புகளில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் பாக்கியலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி நிலவரம் - தளி தொகுதி: நான்காவது வெற்றியை நோக்கி சிபிஐ; தடுக்க வரிந்துகட்டும் பாஜக!
தொகுதி அலசல்: ஸ்ரீவில்லிபுத்தூா் - வெற்றி யாருக்கு என்பது மதில்மேல் பூனை!

கருத்து வேறுபாடுகளை களைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும்! - அமைச்சா் அறிவுறுத்தல்

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் இம்முறை திமுக வெற்றி பெறுவது உறுதி! - வேட்பாளா் க.செல்வராஜ் நம்பிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


