ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளி சங்கத்தினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளி சங்கத்தினா்

ராஜபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் நகரத் தலைவா் பாக்கியராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சரவணன் முன்னிலை வகித்தாா். நகரப் பொருளாளா் கிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஜோதிலட்சுமி, கைத்தறி நெசவாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், சிஐடியூ முன்னாள் நகர கன்வினா் சுப்பிரமணி, நகரச் செயலா் சரவணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா். இதில் திரளான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com