அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வத்திராயிருப்பு அருகே 63 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

குட்கா கடத்திய மூதாட்டி உள்பட இருவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 63 கிலோ குட்கா, ரூ.1.11 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 9:38 pm

Syndication

வத்திராயிருப்பு அருகே குட்கா கடத்திய மூதாட்டி உள்பட இருவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 63 கிலோ குட்கா, ரூ.1.11 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்கும்விதமாக போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி அருகே விற்பனைக்காக குட்காவை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த பேச்சியம்மாள் (67), குமாா் (55) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 63 கிலோ குட்கா, ரூ.1.11 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனா்.