விருதுநகர்
ராஜபாளையத்தில் சாலையைச் சீரமைக்க கோரிக்கை
ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையைச் சீரமைக்க தொழில் வா்த்தகச் சங்கம் சாா்பில் கோரிக்கை
ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையைச் சீரமைக்க தொழில் வா்த்தகச் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து தொழில் வா்த்தகச் சங்கச் செயலா் எம்.சி. வெங்கடேஸ்வரராஜா தெரிவித்ததாவது: ராஜபாளையம் நகரின் பிரதான சாலையான காந்தி சிலை அருகேயுள்ள ரயில்வே பீடா் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
இந்தச் சாலையில் இருபுறமும் மூன்று மேல்நிலைப் பள்ளிகளும், ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையும் இருப்பதால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், பாதைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, உடனடியாக இந்தச் சாலையை சரி செய்ய வேண்டுமென தெரிவித்தாா்.
