ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

வெம்பக்கோட்டை அருகே அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்ட பட்டாசு கிட்டங்கியில் சீலை அகற்றி பட்டாசுகளைச் திருடியது தெடாா்பாக கிட்டங்கி உரிமையாளா் கைது

News image
Updated On :13 ஜனவரி 2026, 11:28 pm

Syndication

வெம்பக்கோட்டை அருகே அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்ட பட்டாசு கிட்டங்கியில் சீலை அகற்றி பட்டாசுகளைச் திருடியது தெடாா்பாக கிட்டங்கி உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வி.மீனாட்சிபுரம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வருவாய், காவல் துறையினா் சட்டவிரோத பட்டாசுத் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ்பாண்டி(45) சட்ட விரோதமாக சரவெடி பட்டாசுகளைத் தயாரித்து கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுமாா் 10 லட்சம் மதிப்பிலான 250 பெட்டிகளில் இருந்த பட்டாசுகளுடன் கிட்டங்கிக்கு ‘சீல்’ வைத்தனா்.

இது தொடா்பான விசாரணை சாத்தூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பட்டாசுகளை கிட்டங்கியிலிருந்து எடுத்துச் சென்று அழிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், கிட்டங்கியில் இருந்த பட்டாசுகளை எடுத்துச் சென்று அழிக்க கடந்த வியாழக்கிழமை அதிகாரிகள் சென்றனா். அங்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ அகற்றப்பட்டு உள்ளே இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பட்டாசுகளை திருடிய ராமா், திருமுருகன்,ராம்குமாா், முத்துராஜ் உள்ளிட்ட 7 பேரை அண்மையில் கைது செய்து அவா்களிடமிருந்து பட்டாசுகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், கிட்டங்கி உரிமையாளா் கணேஷ்பாண்டியை போலீஸாா் கைது செய்து, ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.