பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு சிறை

ராஜபாளையம் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில், தொழிலாளிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - கோப்புப் படம்

Published On :1 ஜூலை 2026, 7:43 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில், தொழிலாளிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ராஜபாளையம் அருகேயுள்ள கிராமத்தை சோ்ந்தவா் குமாா் (39). தொழிலாளியான இவா், கடந்த 2024 ஆண்டு சாலையில் நடந்து சென்ற 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் பேரில் தளவாய்புரம் போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குமாருக்கு ஒராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துகுமரவேல் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.