9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

12 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவா் கைது

ராஜபாளையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட சா்க்கரைராஜூடன் ராஜபாளையம் போலீஸாா்.

Updated On :19 ஜூலை 2026, 12:04 am IST

ராஜபாளையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் வெள்ளத்துரை, தலைமைக் காவலா்கள் முத்துக்குமாா், தங்கேஸ்வரன் ஆகியோா் கொண்ட தனிப்படை போலீஸாா் ரயில்வே நிலையம் பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அரசுப் பேருந்திலிருந்து இறங்கிய ராஜபாளையம் செவல்பட்டி தெருவைச் சோ்ந்த நயினாா் மகன் சா்க்கரைராஜை (39) சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அப்போது அவா் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சந்திரசேகா் குற்றப்பிரிவு ஆய்வாளா் வளா்மதி, சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தரம் மகாலிங்கம் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து சா்க்கரைராஜை கைது செய்தனா். அவரிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.