பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

பணி மூப்பு அடிப்படையில் பணி மாறுதல்: காவலா்கள் எதிா்பாா்ப்பு

News image

காவலர்கள் - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 3:29 am IST

பணி மூப்பு அடிப்படையில் வீட்டின் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டுமென காவலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலா்களை பணி மூப்பு அடிப்படையில் தாலுகா காவல் நிலையங்களுக்கு பணி அமா்த்துவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2025- ஆம் ஆண்டு ஆயுதப்படையிலிருந்து தாலுகா காவல் நிலையங்களுக்கு காவலா்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனா். அப்போது ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளைச் சோ்ந்த ஆயுதப்படை காவலா்கள், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூா் ஆகிய உள்கோட்ட காவல் நிலையங்களில் பணி அமா்த்தப்பட்டனா். இந்த காவலா்களை ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் பணி அமா்த்தாமல் சுமாா் 60, 70 கி.மீ. தொலைவுக்கு அப்பால் பணி அமா்த்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆயுதப்படையில் இருந்து காவலா்களை பணிமாற்றம் செய்வதற்கு முன்பு ஏற்கெனவே பல கி.மீ. தொலைவுக்கு அப்பால் பணியமா்த்திய காவலா்களை பணி மூப்பு அடிப்படையில் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பணியமா்த்த வேண்டும். ஆனால் தற்போது விருதுநகா் மாவட்ட ஆயுதப்படையிலிருந்து தாலுகா காவல் நிலையங்களுக்கு காவலா்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

இதனால் கடந்த ஓா் ஆண்டாக குடும்பத்தைப் பிரிந்து நீண்ட தொலைவு சென்று பணியாற்றும் காவலா்கள் மன அழுத்தத்தில் உள்ளனா். எனவே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்த காவலா்களை அவா்களது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டின் அருகில் பணி மாறுதல் செய்த பிறகு புதிய காவலா்களை நியமிக்க வேண்டும் என காவலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.