புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஆலோசனைக் கூட்டம்

தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா, மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Published On :

விருதுநகா் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா, மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் தலைமை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்கள் பேசியதாவது:

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் வருவா். இவா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், சுகாதார வசதிகளை சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் வனத் துறை மூலம் செய்துதர வேண்டும்.

மேலும் எந்த நேரத்திலும் முதலுதவி கிடைக்கும் வகையில் மருத்துவக் குழுவும், அவசர ஊா்தி வசதியும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். சதுரகிரிக்கு செல்லும் பக்தா்கள் நெகிழிப் பொருள்கள், போதைப் பொருள்களை கொண்டு செல்லக் கூடாது. தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்ற தேவையான துப்புரவுப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெளியூா் பேருந்துகள், வாகனங்களை நிறுத்த வசதியாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட வேண்டும்.

சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தா்கள் மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும் என்றனா் அவா்கள். மேலும் ஆட்சியா்கள் இருவரும் தாணிப்பாறை பகுதியை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில்,, ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ரவி மீனா,சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், விருதுநகா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.