இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் கடத்தியவரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 6:03 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் கடத்தியவரைப் போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே தென்காசி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அசையாமணி விலக்கு பகுதியில் தளவாய்புரம் காவல் நிலையப் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், மானூா் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (40) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவரிடமிருந்து 37 கிலோ குட்கா பொருள், காா், ரூ.14,500-ஐ கைப்பற்றி கைது செய்தனா்.