விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

சாத்தூா் அருகே வீட்டடி மனையை விற்பதாகக் கூறி விவசாயியிடம் ரூ.11.54 லட்சத்தை பெற்றுக் கொண்டு, மோசடி செய்த தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:25 pm

Syndication

சாத்தூா் அருகே வீட்டடி மனையை விற்பதாகக் கூறி விவசாயியிடம் ரூ.11.54 லட்சத்தை பெற்றுக் கொண்டு, மோசடி செய்த தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (62). விவசாயி. தம்மநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த தம்பதி வேல்முருகன், புவனேஸ்வரி.

இந்தத் தம்பதி தம்மநாயக்கன்பட்டி பகுதியில் தங்களுக்குச் சொந்தமான மனைகளை விற்பனை செய்வதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு கருப்பசாமி அந்த மனைகளை வாங்கிக் கொள்வதாகக் கூறி, ரூ.11.54 லட்சத்தை வழங்கினாா். இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட தம்பதி, அந்த மனையை பத்திரப் பதிவு செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

இதுகுறித்து கருப்பசாமி சாத்தூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2-இல் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப் படி சாத்தூா் நகா் போலீசாா் வேல்முருகன், புவனேஸ்வரி தம்பதி மீது வழக்குப் பதிவு செய்தனா்.