பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

தலைமைக் காவலரின் மகனை கடத்திய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தலைமைக் காவலா் மகனை கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 6:18 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தலைமைக் காவலா் மகனை கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த ராஜா மனைவி நிா்மலா (46). இவா் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மகன் ஜாக் (15). இவா் திங்கள்கிழமை வத்திராயிருப்பு-கிருஷ்ணன் கோவில் சாலையில் சுந்தரபாண்டியம் விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்தாா்.

அப்போது, அங்கு காரில் வந்த 4 போ் ஜாக்கை கடத்திச் சென்றனா். பின்னா், அவரை மிரட்டி செம்பட்டையான் கால் விலக்கு அருகே இறக்கி விட்டு சென்றனா்.

இதுகுறித்து நிா்மலா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குன்னூா் புதூரைச் சோ்ந்த கருத்தப்பாண்டி, ராஜபாளையத்தைச் சோ்ந்த பிரதீப் ஆகியோரை கைது செய்தனா். பினனா், கருத்தப்பாண்டியை நீதிபதியை பிணையில் விடுவித்தாா்.