மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மது போதையில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மது போதையில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் பால விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (46). மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா், தினமும் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கம் போல மது போதையில் வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் தனது மனைவியை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் இடது பக்க காதில் காயமடைந்த அவரது மனைவி தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேந்திரனைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



