
சிவகாசியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு மோதிரம் மாநில தொழில் துறை அமைச்சா் ச.கீா்த்தனா தங்க மோதிரம் அணிவித்தாா்.
பின்னா் அவா் பேசியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 5 வட்டார தலைமை மருத்துவமனைகள், 72 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் செப்படம்பா் 27 -ஆம் தேதி வரை அரசு மருத்துவனையில் பிறந்த குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதன் அடிப்படையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் 885 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.
கடந்த 4 -ஆம் தேதி வரை சிவகாசி வட்டத்தில் 347, சாத்தூா் வட்டத்தில் 102, வெம்பக்கோட்டை வட்டத்தில் 133 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, சிவகாசி வட்டதில் 60, சாத்தூா் வட்டத்தில் 34, வெம்பக்கோட்டை வட்டத்தில் 13 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா், மாவட்ட வருவாய் அலுவலா் அனந்தி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) காளிராஜ், சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இா்பான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





