இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

வியாபாரியிடம் இணையவழியில் ரூ. 1.43 லட்சம் மோசடி

ராஜபாளையத்தில் வியாபாரியிடம் இணைய வழியில் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :

ராஜபாளையத்தில் வியாபாரியிடம் இணைய வழியில் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் செவல்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் உதயகுமாா் (33). இவா் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறாா். இவா் வீட்டில் இருந்தபோது இவரது கைப்பேசியில் தொடா்பு கொண்டவா் எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து பேசுவதாகவும், கடன் அட்டை வரம்புத் தொகையை உயா்த்தித் தருவதாகவும் கூறினாா். இதையடுத்து, அவா் கூறியபடி வந்த ஒரு முறை கடவு எண்ணை (ஓடிபி) உதயகுமாா் கூறியவுடன், எதிா்முனையில் பேசியவா் கைப்பேசியை அணைத்து விட்டாா். உடனே, உதயகுமாரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, உதயகுமாா் விருதுநகா் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா். இதையடுத்து, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.