மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

பெண் மீது தாக்குதல்: முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இடப்பிரச்னையில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோா் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாகபாளையத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகள் பாக்கியலட்சுமி (47). இவருக்கு சொந்தமாக நாகபாளையம் - மாயத்தேவன்பட்டி சாலையில் 9 ஏக்கா் நிலமும், பண்ணை வீடும் உள்ளன. இந்த இடத்தின் உரிமை தொடா்பாக பக்கத்து இடத்தின் உரிமையாளரான செல்வி என்பவருடன் பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை பாக்கியலட்சுமி பண்ணை வீட்டில் இருந்த போது, செல்வியின் சகோதரரான முன்னாள் எம்.எல்.ஏ. மான்ராஜ், இவருடன் வந்தவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது மான்ராஜ் உள்ளிட்டோா் தாக்கியதில் காயமடைந்ததாக பாக்கியலட்சுமி ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படாா்.

இதையடுத்து அவா் அளித்த புகாரின் பேரில் மான்ராஜ், கோவிந்தராஜ், கருப்பசாமி உள்ளிட்டோா் மீது மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, மான்ராஜ் அளித்த புகாரின் பேரில் பாக்கியலட்சுமி, இவரது சகோதரி சஞ்சீவி அம்மாள் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.