சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

மீண்டும் பணத்தைக் கையிலெடுக்கும் நிர்பந்தமோ? பணமில்லையேல் பொருள் இல்லை என்றால்...

மீண்டும் பணத்தைக் கையிலெடுக்கும் நிர்பந்தம் ஏற்படுமோ என வணிகர்களும், வாடிக்கையாளர்களும் எண்ணுகிறார்கள்.

சந்தைப் பகுதி

சந்தைப் பகுதி - கோப்புப் படம்

Published On :

யுபிஐ முறையில் ரூ.2000க்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் 0.4 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் மீண்டும், நுகர்வோர், வாடிக்கையாளர்கள் பணமாகக் கொடுக்க வணிகர்கள் வலியுறுத்தலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பணத்தை செலுத்தும் நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று விளக்கம் கொடுக்கப்பட்டாலும், வணிகர்கள் தாங்கள் செலுத்தும் கட்டணத்தை மறைமுகமாக நுகர்வோர் அல்லது வாடிக்கையாளரிடமிருந்தே வசூலிக்கும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மறுபக்கம், ஏடிஎம்-களில் ஏற்கெனவே பணமெடுக்கவும் கெடுபிடிகள் உள்ளன. இவ்வாறு, ஏழை, எளிய மக்கள் வாங்கும் சொற்ப ஊதியத்தையும் செலவிடுவதைக் காட்டிலும், செலவிடுவதற்காக எடுக்கவும் செலவிடவும் செலுத்தும் கூடுதல் கட்டணங்களுக்கே, ஒருவர் பகுதிநேர வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவோம் போல இருக்கிறதே என்று மக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

முதலில், பணத்துக்கு மாற்று என்று கூறி, அனைவரிடமும் யுபிஐ பணப்பரிவர்த்தனையைக் கொடுத்து தற்போது அதற்கு கட்டணம் வசூலிப்பது என்பது, மீண்டும் பணத்தைக் கையிலெடுக்கும் நிலையை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

இது குறித்து உரிய விளக்கம் மற்றும் தெளிவுகள் கிடைத்தபிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்று வணிகர்கள் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு வணிகர்களும் தங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ இயந்திரத்தை வாங்குவதற்கு ஏற்கனவே 2 சதவிகிதம் அளவுக்கு வங்கிகளுக்குக் கட்டணம் செலுத்துகிறார்கள். பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதும் அதனை குரல் மூலம் உறுதி செய்வதற்கு மாத வாடகை ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகை கட்டப்படாவிட்டால் குரல் மூலம் உறுதி செய்யப்படுவது நிறுத்தப்படுகிறது. இது தவிர ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

தற்போது, அதே யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கு மீண்டும் கட்டணம் ஏன் செலுத்த வேண்டும்? என்பதே வணிகர்களின் கேள்வி. இந்த கட்டணங்களை செலுத்துவதற்காகவே தாங்கள் வணிகம் செய்வது போல இருப்பதாகவும் மக்களிடம் கருத்துகள் கேட்கப்படாமல், மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்கள்.

பெரும்பாலான வணிகர்களுக்கு இன்று வரை யுபிஐ கட்டணம் பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படவில்லை. நடைமுறைக்கு வந்த பிறகே, அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று கூறமுடியும் என்கிறார்கள்.

ஏற்கனவே பெரு வணிக நிறுவனங்கள் பல்கிப் பெருகுவது, இ-வணிக நிறுவனங்களுடன் போட்டி, பல்வேறு விதிமுறைகள், கட்டணங்களால் சிறு வணிகர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த யுபிஐ கட்டணம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.

ரூ.2000க்கும் மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவிகித எம்டிஆர் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

இது குறித்த விளக்கத்தில், கடந்த 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, இப்போது உலகின் மிகப் பெரிய நிகழ்நேர எண்மப் பரிவா்த்தனை தளமாக வளா்ந்துள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யுபிஐ-யில் 2,450 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்த அமைப்புமுறையை சுயநிலைத்தன்மை கொண்டதாக, பாதுகாப்பானதாக, புத்தாக்கம் நிறைந்ததாக பராமரிக்கும் வகையில், அதிக மதிப்புடைய வா்த்தக பரிவா்த்தனைகளுக்கு சிறிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

இது, சிறப்பான உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு, சிறிய வணிகா்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க உதவும் என்றும் கூறுகிறது.

எம்டிஆா் என்பது அரசு அல்லது இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனத்தால் (என்பிசிஐ) வசூலிக்கப்படும் வரியோ அல்லது கட்டணமோ அல்ல. அது, பணப் பரிவா்த்தனை அமைப்புமுறையில் அங்கம் வகிக்கும் வங்கிகள், கட்டணச் செயலி வழங்குநா் உள்பட அனைத்து பங்கேற்பாளா்கள் இடையே பிரித்தளிக்கப்படுவதாகும் என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

மேலும், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், தனிநபா்களுக்கு இடையிலான பரிவா்த்தனைகள், ரூ.2,000-க்கு உள்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. ரூ.75,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு ரூ.300 கட்டண உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே, தொலைத்தொடா்பு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பொருத்தவரை, ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவா்த்தனைகளுக்கு நிலையாக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். யுபிஐ க்யூஆா் கோடு மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டும் சிறு வணிகா்களுக்கு கட்டணத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் யுபிஐ மூலம் ரூ.314 லட்சம் கோடி மதிப்பில் 24,161 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.