/

இம்போர்ட்டட் சரக்கு

மனநல மருத்துவமனையில் இருக்கும் தன் நண்பனைப் பார்க்க வந்தான் ராபர்ட். ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தபோதுதான் தனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. வாட்சைப் பார்த்தான். அது நின்று போய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:05 pm

அபி

மனநல மருத்துவமனையில் இருக்கும் தன் நண்பனைப் பார்க்க வந்தான் ராபர்ட். ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தபோதுதான் தனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. வாட்சைப் பார்த்தான். அது நின்று போய் இருந்தது.

  அங்கே தோட்டத்தில் நின்றிருந்தவனைப் பார்த்து ""நேரம் என்ன'' என்றான்.

  கொஞ்சம் பொறுங்கள் என்று சைகையில் காட்டிவிட்டு வேகமாக அங்கிருந்த மரத்தின் மீது ஏறினான். நீளமான குச்சி ஒன்றை ஒடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தான். குச்சியில் இருந்து விழும் நிழலின் நீளத்தை அளந்தான். ராபர்ட்டிடம் இருந்து பேனா வாங்கி சில கணக்குகள் போட்டான். அத்தனையையும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ராபர்ட்.

  ""இப்போது சரியாக மணி மாலை 3 ஆகி 28 நிமிடங்கள் ஆகின்றன'' என்றான்.

  ராபர்ட்டுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. ""மேக மூட்டமாக இருந்தாலோ, இரவு நேரத்திலோ எப்படி நேரத்தைக் கணிப்பீர்கள்?'' என்றான் ஆர்வம் பொங்க.

  ""சிம்பிள். என் பாக்கெட்டில் வாட்ச் இருக்கிறதே'' என்று எடுத்துக் காட்டினான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.