/

விருந்து: இதுதான் என் சொத்து!

எந் தக் காரி யத் தில் இறங் கி னா லும் ஆதா யம் கிடைக் குமா என்று அலைந்து திரி யும் மனோ பா வம் வளர்ந் து விட்ட தற் கால சமூ கத் தில், தன் தொழில் மூலம் கிடைக் கும் வரு வா யில் ஒரு பகு தியை ஏழை க ளுக்கு அற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:42 am

வே.சுந்தரேஸ்வரன்

எந் தக் காரி யத் தில் இறங் கி னா லும் ஆதா யம் கிடைக் குமா என்று அலைந்து திரி யும் மனோ பா வம் வளர்ந் து விட்ட தற் கால சமூ கத் தில், தன் தொழில் மூலம் கிடைக் கும் வரு வா யில் ஒரு பகு தியை ஏழை க ளுக்கு அறு சுவை உண வாக விருந் த ளித்து களிப் பு றும் மனி தர் களும் இருக் கத் தான் செய் கி றார் கள்.

தான் மிக வும் வறிய நிலை யில் இருந் த போது ஒரு டீக்கு ஏங் கி யதை எண் ணிப் பார்த்து, அதன் கார ண மா கவே ஏழை க ளுக்கு அறு சுவை உணவு வாரந் தோ றும் முகம்} அகம் மலர தலை வா ழை யிட்டு பரி மாறி வரு கி றார் மது ரை யைச் சேர்ந்த கே.ஜி.நாரா ய ணன்.

 மதுரை காம ரா ஜர் சாலை அர ச ம ரம் பிள் ளை யார் கோவில் அருகே மொச் சைக் கொட்டை சாம் பார் புகழ் "ரேவதி டிபன் சென் டரை' 20 ஆண் டு க ளாக நடத்தி வரும் இவர், வாரம் தோ றும் அறு சுவை உணவை 100 பேருக்கு ஆர வா ர மின்றி இல வ ச மாக வழங்கி வரு கி றார்.

இந்த விருந் தோம் பல் தொடங் கப் பட் ட தற் கான கார ணம் குறித்து அவ ரி டம் பேசி னோம். அப் போது நாரா ய ணன் கூறி ய தா வது:

""நான் நடுத் தர குடும் பத் தைச் சேர்ந் த வன். எனது ஒன் றரை வய தி லேயே தந் தையை இழந் து விட் டேன். தாயார் வளர்ப் பில் வளர்ந்த எனக்கு குடும் பப் பாரத்தை சிறு வ ய தி லேயே சுமக்க வேண் டிய கட் டா யம். இத னால், நாலாங் கி ளா ஸýக்கு மேலே பள் ளிக் கூ டப் படி க ளைக் கூட என் னால் மிதிக்க முடி ய வில்லை.

எனக்கு 27 வய தி ருக் கும் போது தற் போ துள்ள எனது கடை அரு கி லேயே சாலையோரத் தில் சாக்கு விரித்து இட்லி கடை போட் டேன். ஆரம் பத் தில் மொச் சைக் கொட்டை குழம்புடன் இட்லி மட் டும் போட்டு வியா பா ரத் தைத் தொடங் கி னேன்.

சில ஆண் டு கள் கழித்து ரியல் எஸ் டேட் தொழி லி லும் ஈடு பட் டேன். தொடர்ந்து நேர் மை யான வியா பா ரம் மூலம் கிடைத்த நற் பெ ய ரைக் கொண்டு, அரு கி லேயே ரேவதி டிபன் சென் டரை ஆரம் பித் தேன். இன் றைக்கு 25 பேருக்கு வேலை கொடுக் கும் அள வுக்கு உயர்ந் துள் ளேன்.

சிறு வ ய தில் நான் பிளாட் பா ரத் தில் கடை வைத் தி ருந் த போது என் னைப் போன்று பல ரும் அறு சுவை உணவு கிடைக் காதா என்று ஏங் கி ய தைப் பார்த் துள் ளேன். அத னால், தற் போது நல்ல நிலை யில் உள்ள எனக்கு, ஏன் வாரம் தோ றும் சாலை யோர கடைக் கா ரர் க ளுக் கும், ஏழை க ளுக் கும் அறு சுவை உணவு படைக் கக் கூடாது என்ற எண் ணம் தோன் றி யது.

இதன் வி ளை வாக கடந்த சில மாதங்களாக கடை விடு முறை நாளான செவ் வாய்க் கி ழமை இந்த அறு சுவை விருந் த ளிக் கும் திட் டத்தை நடத் தி வ ரு கி றேன். தொடக் கத் தில் 25 பேருக்கு மட் டும் உணவு போட் டேன். தற் போது 100 பேர் வரை வரு கின் ற னர். அவர் க ளுக்கு உணவு போடு வ தற்கு ஒரு மணி நேரத் திற்கு முன் கூட் டியே டோக் க னும் வழங் கப் ப டு கி றது.

வழக் க மான சாம் பார், ரசம், மோர், புளிக் கு ழம்பு, ஊறு காய் மற் றும் மூன்று வகை பொரி ய லு டன், வடை, பாயா சம், நெய், வாழைப் ப ழம் ஆகி ய வற் று டன் உணவை வழங் கு கி றோம். உணவை உண் டு விட் டுப் போகும் போது சம் பி ர தா யப் படி வெற் றிலை} பாக் கும் தரு கி றோம்.

ஏழை க ளும், நடுத் தர வரு வாய் கடைக் கா ரர் க ளும் மகிழ்ச் சி யு டன் வயி று முட்ட உணவை உண் பதைப் பார்க் கும் போது எனக் கும் எனது குடும் பத் தா ருக் கும் ஆத்ம திருப்தி கிடைக் கி றது.

இப் பி ற வி யில் நல்ல காரி யங் கள், தியா கங் கள் செய் வ தன் மூல மாக அடுத்து வரும் நம் சந் த தியைச் சிறப் பாக உரு வாக் கும் வாய்ப் பு கள் கிடைக் கும். எப் படி நம் குழந் தை க ளுக்கு சொத் து கள் சேர்த்து வைக் கி றோமோ, அதே போன்று இது போன்ற நற் கா ரி யங் களைச் செய் வ துதான் என் சொத்து. இதனால்  புண் ணி யத் தை சேர்த்து வைக்க முடி யும் என் பது என் நம் பிக்கை. தவ றான பாதைக்கு அவர் கள் சென் றால் கூட புண் ணி ய மா னது அவர் க ளைத் தடுத்து நிறுத்தி காப் பாற் றும்.

இது மட் டு மன்றி, ஏழைக் குழந் தை க ளுக்கு என் னால் முடிந்த அளவு படிப் ப தற்குப் பண உதவி செய்து வரு கி றேன். குடும் பத் தில் இறந் த வர் களை அடக் கம் செய் யக் கூட முடி யாத நிலை யில் பணக் கஷ் டத் தில் இருப் ப வர் கள் என் னி டம் தெரி வித் தால், அம ரர் ஊர் திக் கான வாட கை யும் அளிக் கி றேன்.

என் னைப் போன்று ஹோட் டல் கா ரர் கள் பல ரும் இது போன்று வாரம் ஒரு முறை இல வச விருந் த ளிக்க முன் வந் தால் மிக வும் மகிழ்ச்சி அடை வேன்.

எதிர் கா லத் தில் வாய்ப் பி ருந் தால் வெளி யூர் க ளில் இருந்து பிழைப் புத் தேடி வரு வோ ர் தங்குவதற்கு சத் தி ரத்தை மது ரை யில் கட் ட வும் திட் ட மிட் டுள் ளேன்'' என்று மலர்ந்த முகத் து டன் கூறு கி றார் நாரா ய ணன்.

உணவு படைப் ப தற்கு முன்பு தனது குடும் பத் தி ன ரு டன் பூஜை நடத்தி பய பக்தி உணர் வு டன் உணவு பரி மா று கி றார் இவர். தன் அனு ப வத் தின் மூலம் தனக்கு கிடைத் த தைப் பொன் மொ ழி யாக பல கை யில் எழுதி கடை யில் வைத் து வி டு கி றார். இது வாடிக் கை யா ளர் களை மிக வும் ஈர்ப் ப தாக உள் ளது.

"வரு வி ருந்து வைக லும் ஓம் பு வான் வாழ்க்கை, பரு வந்து பாழ் ப டு தல் இன்று' (விருந் தி னரை வர வேற்று, மகிழ் ப வ னின் வாழ்க்கை, அதன் கா ர ண மாக துன் புற்று ஒரு போ தும் கெட் டொ ழி வ தில்லை) எனும் வள் ளு வ ரின் குறள் எத்தனை பெரிய உண்மையை எளிமையாகச் சொல்லியிருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.