அதிசயம் ஆனால் உண்மை!

அகிலன் ஆம்புலன்ஸ் டிரைவர். ஆகஸ்டு 26ஆம் தேதி 12.10 மணிக்கு ஒரு நோயாளியை கோலார் தங்கவயலில் உள்ள பி.இ.எம்.எல். மெடிக்கல் சென்டரிலிருந்து
அதிசயம் ஆனால் உண்மை!
Updated on
2 min read

அகிலன் ஆம்புலன்ஸ் டிரைவர். ஆகஸ்டு 26ஆம் தேதி 12.10 மணிக்கு ஒரு நோயாளியை கோலார் தங்கவயலில் உள்ள பி.இ.எம்.எல். மெடிக்கல் சென்டரிலிருந்து பெங்களூருவில் உள்ள  செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஒப்படைத்தார்.

திரும்பும் போது ஹோஸ்கோட்டுக்கு ஐந்து கி.மீ. முன் விபத்தில் சிக்கினார்.

எதிரில் வந்த வாகனம், ஹெட்லைட்டை பளிச்சென அடித்தபடி வர, ஒரு கணம் தடுமாறிய அகிலன், நிலைகுலைந்து அருகில் உள்ள டிவைடரில் ஏற்றிவிட... பிறகு நடந்ததை அகிலனே விவரிக்கிறார்...

""விபத்து நடந்த பின், எப்படியோ வெளியேவந்து விட்டேன். என் முகத்தில் காயம் ஏற்பட்டு ஒரே இரத்தமாய் இருந்தது. வலது காது அறுந்து விழாமல், தொங்கிக் கொண்டிருந்தது. இடது காதைக் காணோம். அதற்குள் அங்கு திரண்ட கிராம மக்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். அத்துடன் அறுந்து விழுந்த காதை தேடிக் கண்டுபிடித்து, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பையையும் ஆம்புலன்ஸில் கொடுத்து ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கச் செய்தனர். என்னுடன் ஆம்புலன்ஸில் பேஷண்டின் உதவிக்கு வந்த பி.இ.எம்.எல் மெடிக்கல் சென்டரின் உதவியாளர்கள். சிறுசிறு காயங்களுடன் தப்பிவிட்டனர்''  என்றார்.

ஹாஸ்மட் ஆஸ்பத்திரியில் (பெங்களூரு) அகிலன் சேர்க்கப்பட்டார்.

உடனே ஆஸ்பத்திரி நிர்வாகம் விழிப்புற்றது.

அகிலனின் வலது காதை நீண்ட 4 மணி நேர ஆபரேஷன் செய்து இணைத்தனர்.

அதே சமயம் பிளாஸ்டிக் பையிலிருந்த இடது காதை வெளியில் எடுத்தபோது, அதனை பாக்டிரியாக்கள் பீடித்திருப்பது தெரிந்தது.

 அந்தக் காதையும் பொருத்த வேண்டுமானால் முதலில் அதற்கு ஊட்டச்சத்து அளித்து உயிரூட்டுவது அவசியம். வெளியில் இருந்து பாதுகாத்தால் அது "இறந்து'விடும். ஆக அதனை காப்பாற்ற அகிலனின் அடிவயிற்றிலேயே மைக்ரோ சர்ஜரி மூலம் இணைத்து அதற்கு ரத்த ஓட்டம் செல்லும்படி செய்துவிட்டனர்.

இதனிடையே இடது காதில் மிஞ்சியுள்ள உறுதியான இணக்கமான ஜவ்வுடன், பொருத்த உள்ள இடது காது இணைய ஏதுவாய், தலையின் மேல் பகுதியிலிருந்து தசையை எடுத்து அடித்தளம் அமைத்துத் தைத்தனர்.

ஒரு வாரத்தில் இடதுகாதுக்கு, போதுமான ரத்த ஓட்டம் செல்ல அது  ஜீவன் மாறாமல் அப்படியே இருந்தது. பிறகு அதனை எடுத்து சர்ஜரி மூலம் மீண்டும் அதன் இடத்திலேயே பொருத்திவிட்டனர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இரண்டு காதுகளும் விபத்தில் பாதிக்கப்பட்ட  நிலையிலும் அவருக்கு தெளிவாக காது கேட்டதுதான்.

வலது காதைப் போலவே இடது காதும் பழையபடி உடல் இயக்கத்தில் இணைந்துவிட்டது. இன்னமும் சிலநாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து பார்த்துக் கொண்டு அகிலன் வீடு திரும்புவார்.

அறுந்து விழுந்த காதை பாதுகாப்பது எப்படி?
உப்பு கலந்த தண்ணீர் அல்லது வெறும் தண்ணீரில் அறுந்த காதைப் போட்டு, அதனை ஐஸ் பெட்டிக்குள் வைத்து எடுத்து வந்தால், காதை உடனடியாகப் பொருத்திவிடமுடியும். காதை தொற்று இல்லாமல் பாதுகாப்பாக எடுத்து வர இது ஒன்றே வழி.

இந்த ஆபரேஷன்களை வெற்றிகரமாக செய்தவர் டாக்டர் தீபு.

இவர் ஏற்கெனவே அகமதாபாத்தில் பணி புரிந்துபோது, அங்கு இதே முயற்சியை மேற்கொண்டார். அப்போது அதுதோல்வியில் முடிந்தது.

அந்த அனுபவத்தை, மீண்டும் செயல் படுத்தியபோது வெற்றி கிடைத்துவிட்டது. டாக்டர் தீபு சொல்கிறார்: ""இது மிகப்பெரிய சவால். இந்த வகை ஆபரேஷனில் விபத்துக்கும் - ஆபரேஷனுக்கு உள்ள நேரம் முக்கியம்.  உடனடியாக அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அதுவும் துல்லியமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com