ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்கிங் ஸ்டிக்கின் கதை

நம்ம வீட்டு தாத்தா பாட்டிகள் கம்பு ஊன்றி நடப்பது நமக்குத் தெரிந்த விஷயம்.

News image
Updated On :13 ஜூன் 2015, 2:25 pm

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

நம்ம வீட்டு தாத்தா பாட்டிகள் கம்பு ஊன்றி நடப்பது நமக்குத் தெரிந்த விஷயம்.

நடைக்குச்சியை நாம் சகஜமான பாணியில் அழைக்கும் "வாக்கிங் ஸ்டிக்' என்றே அழைப்போம்.

ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் சீனாவிலிருந்து, பட்டுக்கூடுகளைக் கடத்தி வர கடும் தடையும் தண்டனையும் இருந்தது. அப்போது இத்தகைய வாக்கிங் ஸ்டிக் மூலம் பலர், பட்டுக்கூடுகளைக் கடத்தி வந்தனராம்.

16ஆம் நூற்றாண்டில் வாக்கிங் ஸ்டிக்கின் அடியில் கூரான கத்தி பொருத்தப்பட்டிருந்தது. இவான் (ஐஸ்ஹய்) என்ற மன்னனிடமும் இத்தகைய வாக்கிங் ஸ்டிக் இருந்தது.

அவன், பேசிக்கொண்டிருக்கும்போதே, தனக்குத் துரோகம் செய்பவர் என்று நினைத்தால் போதும் சடாரென ஸ்டிக்கை தூக்கி, அடியில் இருக்கும் கத்தியை அவர்கள் நெஞ்சில் பாய்ச்சி விடுவானாம்!

பிரிட்டனில் வாக்கிங் ஸ்டிக்கை முதன்முதலில் மன்னர் எட்டாம் ஹென்றிதான் பயன்படுத்தினார்.

1596-இல் ஆர்ச் டீயூக் ஃபெர்டினான்ட் விட்டுச்சென்ற வாக்கிங் ஸ்டிக்கின் அடியில் அரம் பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். குத்துவாளும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.

"வாக்கிங் ஸ்டிக்'கைப் பயன்படுத்தவென்றே பிரிட்டனில் பல சட்டங்கள் அறிமுகமாயின. அதில் முக்கியமானது ராணியின் அரண்மனையான பக்கிங்ஹாம் அரண்மனை அருகே யாரும் குச்சியுடன் செல்ல அனுமதி இல்லை.

இந்த நிலையில் அப்போதைய பிரதமர் க்ளாட் ஸ்டோன், வாக்கிங் ஸ்டிக்குடன் அரண்மனைப் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அரண்மனை காவலாளி, வாக்கிங் ஸ்டிக்கை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு நடையைத் தொடர வேண்டினார். அப்போதுதான் பிரதமருக்கு அந்தச் சட்டம் நினைவுக்கு வந்தது. உடனே தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு தன் பயணத்தையும் தொடர்ந்தார்.

ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரர். அவரிடம் ஏராளமான வாக்கிங் ஸ்டிக்குகள் உண்டு. இவற்றில் பலவற்றை ஹைதராபாத் சப்தர்ஜங் அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம். இங்கு நிஜாமுக்கு அன்பளிப்பாக வந்த வாக்கிங் ஸ்டிக்குகள், அவரே வாங்கியவை என பல ரகங்கள் உண்டு. அவற்றில் தந்த கவசம் பொருத்திய வாக்கிங் ஸ்டிக், தங்கம், வெள்ளிக் கவசம் பொருத்தப்பட்ட தலையுடன் கூடிய வாக்கிங் ஸ்டிக்குகள் என பலவற்றையும் காண முடியும்.

இங்கிலாந்தில் ஸ்டூவர்ட் தாம்ப்சன் என்பவர், ஷபட்ங் ஜ்ஹப்ந்ண்ய்ஞ் ள்ற்ண்ஸ்ரீந்' என்ற பெயரில் ஒரு கடையை நடத்துகிறார். இங்கு உலகின் பல வகையான, பல வேலைப்பாடுகளைக் கொண்ட ஸ்டிக்குகளை காணலாம். சீன களிமண் பிடிகொண்ட வாக்கிங் ஸ்டிக் கூட உண்டு. இவரைத் தேடி பிரபல டாக்டர்கள், வக்கீல்கள், சினிமா நட்சத்திரங்கள் வந்து வாக்கிங் ஸ்டிக்குகளை வாங்கிச் செல்வது உண்டு. ஆனால் ஒன்றுக்கு மேல் ஒரு ரகத்தில் கேட்டால் விலைக்குத் தரமாட்டார்! ஆக இவர் இதனை அருங்காட்சியகம் மற்றும் விற்பனை நிலையமாக நடத்துவதால் விற்பனையில் நிறைய கட்டுப்பாடுகள் உண்டு.

5-ஆம் நூற்றாண்டிலிருந்து 15-ஆம் நூற்றாண்டு வரை பல நாடுகளின் ஆட்சியில் மதத்தின் குறுக்கீடு அதிகம் இருந்தது. மதகுருமார்கள் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக்கின் உள்ளே காலியான இடத்தில் பண நோட்டுகள், நவரத்தினங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பர்.

உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த வாக்கிங் ஸ்டிக்கைப் பயன்படுத்திய பெருமை 14 ஆம் லூயிஸ் மன்னருக்கு உண்டு.

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் தாமஸ் கடையில், ஸ்டிக்குகளுடன் அழகிய ஓவியங்களும் உண்டு. அரண்மனை மற்றும் இந்த இடங்களில் காணப்படும் ஓவியங்களில் மன்னர் எட்டாம் ஹென்றி சார்லஸ் - 1 ஆகியோர் அந்தந்த காலகட்டங்களில் கைகளில் வாக்கிங் ஸ்டிக்கை வைத்து தரையில் அழுத்திக் கொண்டிருப்பது தெரிகிறது.

அன்று வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துப்போனாலே பெரிய மனிதர்... கௌரவம்.

இன்றோ வயதானர்கள், பலர் வாக்கிங் ஸ்டிக்குடன் நடப்பதை கௌரவக் குறைவாக எடுத்துக்கொண்டு நடக்க கஷ்டப்பட்டாலும் அது இல்லாமல் நடந்து கஷ்டப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.