

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த ஐந்து பிராண்ட்களைப் பற்றி கேட்டால், அனைவருமே "தெரியுமே' என்பர்.
இதில் 4 கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டது. இன்று கம்ப்யூட்டர் துறையில் தினமும் புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த நிமிடமே அது உலகம் முழுவதும் பரவிவிடுவதால், அவற்றைப் பற்றி தெரியாதவர்களே இருக்க இயலாது. இந்த வகையில் ஒரு பிராண்ட். தனி மதிப்பு கொண்டது. அதன் மதிப்பு கூடிக்கொண்டே போகும். அந்த வகையில் உலகம் முழுவதும் அறியப்பட்ட " டாப்'பான பிராண்டுகள்.
1) ஆப்பிள்
இதன் பிராண்ட் மதிப்பு 247 பில்லியன் அமெரிக்க டாலர். கடந்த ஆண்டு ரேங்க் - 2. இந்த ஆண்டு முதல். லேட்டஸ்ட் அறிமுகம் ஐ போன் - 6 உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
10 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிள், உலகின் முதல் 10 சூப்பர் பிராண்டுகளில் இடம் பெறவேயில்லை. ஆனால் இந்த ஆண்டு ஐ-போன் - 6 மூலம் மட்டும், மிக அதிக காலாண்டு லாபமாக 18 பில்லியன் டாலர் சம்பாதித்தது. ஒரு தனியார் கம்பெனி, காலாண்டு லாபம் என்ற வகையில் மிக அதிக லாபத்தைப் பெற்ற கம்பெனி இதுதான்.
2) கூகுள்
இதன் பிராண்ட் மதிப்பு 174 பில்லியன் அமெரிக்க டாலர்.
கடந்த ஆண்டு இதன் மதிப்பு முதல் இடம்.
இந்த இறக்கத்திற்கு காரணம் மெதுவான செயல்பாடு அல்ல! மாறாக பல புதிய திட்டங்களில், ஏராளமாக முதலீடு செய்திருப்பதுதான்.
உதாரணமாக ஆ2ஆ சாப்ட்வேர்... கூகுள் பைஃபர்; டிரைவர் இல்லாமலே இயங்கும் கார். ரஐ-ஊண் டெலிகாம் நெட் ஓர்க்... மற்றும் கூகுள் கிளாûஸ மறுபொருத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டு இருப்பதுதான்! ஆக வருங்காலத்தில் இதன் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
3) மைக்ரோசாஃப்ட்
இதன் பிராண்ட் மதிப்பு 115 பில்லியன் அமெரிக்க டாலர்.
கடந்த ஆண்டு தகுதி - 4
இதன் புதுத் தலைவரும் இந்தியருமான சத்யா நாடில்லாவின் புதிய செயல்பாடுகள் இதற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
4) ஐ.பி.எம்.
இதன் பிராண்ட் மதிப்பு 94 பில்லியன் அமெரிக்க டாலர்.
கடந்த ஆண்டு ரேங்க் - 3
இந்த ஆண்டு 4க்கு இறங்கியிருப்பதற்கு காரணம் சுணக்கம் அல்ல.
அனலிடிக்ஸ்; மொபைல்; சோஷியல் மாற்றம் செக்யூரிட்டியியல் ஆகிய ஆய்வுகளில் , ஈடுபடுத்திக் கொண்டிருப்பதுதான். மேலும் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பிசினஸ் ஆப்ஸ் (அல்ல்ள்)களை உருவாக்கி மார்க்கெட்டில் நுழைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதுதான்.
5) விசா ( கார்டு பிசினஸ்)
இதன் பிராண்ட் மதிப்பு 92 பில்லியன் அமெரிக்க டாலர். கடந்த ஆண்டு ரேங்க் - 7. தற்போது, இரண்டு இடம் முன்னேறியுள்ளதற்கு இது ஆப்பிளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு விற்பனை முயற்சிதான் காரணம். ஐ.போன் -6, மற்றும், சமீபத்திய புதிய ஐ.பேட்களை விற்பதில் அதிக ஈடுபாடு செலுத்தி தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிக லாபமும், வருமானமும் கிடைக்கப் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.