விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாதுகாப்பு

காலை மணி பத்து இருக்கும். சுந்தரேசன் வாசலில் சாய்வு நாற்காலியில்  உட்கார்ந்து கொண்டு அன்றைய செய்தித்தாளைப் படித்துக் கொண்டு இருந்தார். அவர் மனைவி சந்திரா வெண்டைக்காய்களை நறுக்கிக்

News image
Updated On :15 மார்ச் 2020, 4:49 pm

வளவ. துரையன்

காலை மணி பத்து இருக்கும். சுந்தரேசன் வாசலில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அன்றைய செய்தித்தாளைப் படித்துக் கொண்டு இருந்தார். அவர் மனைவி சந்திரா வெண்டைக்காய்களை நறுக்கிக் கொண்டிருந்தார். தாளில் மூழ்கிக் கொண்டிருந்தவருக்கு யாரோ சுற்றுச்சுவர் கதவைத் திறந்து வரும் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தார். சுந்தரி வந்து கொண்டுஇருந்தாள்.
அதற்குள் அவளைப் பார்த்து விட்ட அவர் மனைவி, “""வா, சுந்தரி, எங்க ரெண்டு நாளா ஆளையே காணோம்?''” என்று கேட்டாள்.
பதிலேதும் சொல்லாத சுந்தரி... "அப்பாடா'” என்று சொல்லிக்கொண்டே பெருமூச்சு விட்டு உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த போது அவள் தோளில் போட்டிருந்த துண்டு நழுவிக் கீழே விழுந்தது. துண்டால் கழுத்திலும் முகத்திலும் வியர்வையைத் துடைத்துக் கொண்டாள் சுந்தரி. அப்போதுதான் அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரா, ""“என்னா சுந்தரி, கையிலக்கட்டு”?'' என்று கேட்டாள்.
சுந்தரி லேசாகச் சிரித்துக் கொண்டே, ""எல்லாம் வழக்கம் போலத்தான்; அந்தக் கட்டையில போறவன் கட்டையால அடிச்சதாலக் கட்டு''” என்றாள் வேதனை கலந்த
குரலில்.
""பரவாயில்லயே... சுந்தரி, நீ கூடக் கவிதை மாதிரி பேசறயே?''” என்று நிலைமையை மாற்றச் சிரித்துக் கொண்டே கேட்டார் சுந்தரேசன்.
பதிலுக்கு அவளோ, ""சாரு, நான் அந்தக் காலத்திய எஸ் எஸ் எல்சி தெரியுமா?''” என்றாள். அவரும் விடவில்லை. ”
""அப்பறம் ஏன் அஞ்சாவது படிச்ச இந்த ஆறுமுகத்தைக் கட்டிக்கிட்ட?''” என்று கேட்க, அவளோ, “""எல்லாம் ஒரு ஆசைதான். அது அத்த புள்ள இல்லியா?''” என்றாள் வெட்கத்துடன்.
""ஓ... காதல் கல்யாணமோ?''” என்று உற்சாகம் கலந்த குரலில் அவர் கேட்க, இடையில் குறுக்கிட்ட சந்திரா, ""நீங்க கொஞ்சம் சும்மா இருங்க... ஏன் ஒனக்கும் அவனுக்கும் என்னா தகராறு?''” என்று கேட்டாள். “
""எல்லாம் அதேதாம்மா... மில்லுல குடுத்தக் கூலியில குடிச்சிட்டாரு. அப்பறம் நான் சிறுவாடு சேத்து வச்சிருக்கற காசைக் கேட்டாரு. நான் குடுக்கமாட்டேன்னு சொல்ல அதால வந்த சண்டைதான்''”
""அதுக்காக அடிக்கறதா? அவனுக்கு இதே வழக்கமாப் போச்சு''” என்றாள் சந்திரா.
""ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை அவன் இதே மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்கான்''” என்ற சுந்தரேசனிடம், சுந்தரி, ”""நான் கணக்கெல்லாம் வச்சிக்கறதில்லிங்க''” என்றாள். “
""நாங்கதாம் பாத்துக்கிட்டிருக்கோமே''” என்றாள்
சந்திரா.
""”ஆமாம்மா. இன்னிக்கு நேத்திக்கா நடக்குது?''” என்றாள் சுந்தரி. “
""இத்தோடவா நீ வேலக்குப் போயிட்டு வர்ற'' என்ற சந்திராவின் கேள்விக்கு,
""”ஒரு வாரமா போவலம்மா. கட்டு போட்டு இன்னியோட ஏழு நாளு ஆவுது. இதுக்கு மேலயும் போவாட்டா வேற ஆளு வச்சிக்குவாங்க. இதுவும் போயிட்டா எப்படி துன்றது?''” என்று சுந்தரி பதில் சொன்னாள்.
""அந்தக் கட்டையப் புடுங்கி அவன நாலு சாத்தறதுதான?''” என்றார் சுந்தரேசன்.
""என்னா சாரு... கட்டிக்கிட்ட புருசனப் போயி அடிக்கச் சொல்றீங்க?''” என்று சுந்தரி கேட்டாள். ”
""ஓ... கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசனா?''” என்றார் சுந்தரேசன். “""அதெல்லாம் தெரியாது சாரு. நாங்கள்லாம் கிராமத்துலப் பொறந்து வளந்தவங்க''” என்று அவள் சொல்ல, “""ஒங்க சீர்திருத்தம்லாம் மேடையோட வச்சிக்குங்க''” என்றாள் அவர் மனைவி.
""பின்ன என்னா சந்திரா... ரெண்டு பொண்ணயும் கல்யாணம் செஞ்சு கொடுத்துப் பேரன் பேத்தி எடுத்தாச்சு. இன்னும் கூட அவன் இதுமாதிரி நடந்தா சரியாயிருக்குமா?'' என்று கேட்டார் சுந்தரேசன்.
""இதெல்லாம் எங்க தலைவிதிங்க... நான் வரேம்மா; போயி சோறு ஆக்கணும்; அது மத்தியானம் ஊட்டுக்கு வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கு''” என்று சொல்லிக்கொண்டே எழுந்த சுந்தரி மெதுவாக நடந்து சென்றாள்.
சுந்தரி திருமணமாகி இந்த ஊருக்கு வந்ததிலிருந்து எங்களுக்குப் பழக்கம். அப்போது எங்கள் வீட்டிற்கும் வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. ஆறுமுகம்தான் ”""என் பொண்டாட்டி நல்லா வேலை செய்வாங்க''” என்று சொல்லி அமர்த்தினான். மில்லில் நெல் அரைவைக்குப் போவதால் ஆறுமுகமும் நல்ல பழக்கம்தான். சுந்தரி தன் குடும்ப செய்திகள் அனைத்தும் சொல்வாள். அவளுடைய இரண்டு பெண்களையும் நாங்கள் சொல்லித்தான் ஆசிரியர் பயிற்சியில் சேர்த்துப் படிக்க வைத்தாள். அவர்கள் இருவரும் கும்பகோணத்திலும், மதுராந்தகத்திலும் குடியிருக்கிறார்கள். இந்த ஆறுமுகம்தான் எவ்வளவு புத்தி சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறான். சுந்தரியும் வேறு வழியின்றித் தண்ணீரில் தத்தளிக்கும் சிற்றெறும்பாய்த் தவிக்கிறாள். இத்தனைக்கும் அவள் தந்தையும் வசதியானவர்தான்.
இரண்டு மூன்று வீடுகளில் வேலைக்கு இந்த வழியாய்ப் போய் வரும்போது எங்கள் வீட்டிற்கு வந்து ஊர்ச் சங்கதிகள் பேசிவிட்டுப் போவது சுந்தரியின் வழக்கம்.
பத்துப் பதினைந்து நாள்கள் போயிருக்கும். “
""அம்மா இல்லீங்களா?''” என்று கேட்டுக்கொண்டே சுந்தரி வந்து உட்காரவும், ""வா சுந்தரி... இந்தா மோர் குடி''” என்று சந்திரா வரவும் சரியாயிருந்தது.
""இது ஐயாவுக்குக் கொண்டு வந்ததுதான''” என்று சுந்தரி சிரிக்க, “""ஆமாம் அவருக்கு இதோ போய் வேற கொண்டு வரேன்''” என்று சொன்ன சந்திரா உள்ளே சென்று இன்னொரு குவளையில் மோர் கொண்டு வந்தாள். அதற்குள் சுந்தரி குடித்து முடித்து விட்டாள்.
""நாலு நாள் முன்னாடி நடந்த கொசக்கடைத் தெரு அக்குறும்பைக் கேள்விப்பட்டீங்களாம்மா?''” என்று ஆரம்பித்தாள் சுந்தரி. ”
""அந்தப் பொண்ணு வெவகாரம்தான?'' என்று சொன்னாள் சந்திரா.
சுந்தரேசனும் ஆர்வத்துடன், ""ஆளுங்க யாராம்?''” என்று கேட்டார். “
""நல்ல பொண்ணு சுந்தரி அது. நான் பாத்திருக்கேன்''” என்றாள் சந்திரா. ”
""எப்படி நடந்துச்சாம்?” ஆளுங்க யாராம்? வெளியூரா''”என்று சுந்தரேசன் மறுபடியும் கேட்டார். ”
""எல்லாம் உள்ளூர்ப் பசங்கதான். பத்து நாளா நோட்டம் உட்ருக்கானுவ; படிப்பேறாதவனுவ ரெண்டு பேரு. படிச்சு முடிச்சு வேலக் கெடைக்காதவன் ஒருத்தன். இவனுவ டவுனுக்குப் போயிட்டு நடந்து வந்திருக்கானுவ. அது அன்னிக்குப் பாத்துக் காலேசுலேந்து கடைசி பஸ்சுல வந்திருக்குது. வாயைப் பொத்தி இழுத்துக்கிட்டுப் போயிட்டானுவ. அடையாளம் சொல்லிடக் கூடாதுன்னுக் கெணத்துலத் தூக்கிப் போட்டுட்டாங்க''”
""அங்க இங்க சுத்திக் கடைசியில நம்ம ஊர்லயே நடந்திட்டுதே''” என்றாள் சந்திரா கவலை தோய்ந்த குரலில். “
""ஆமாம்மா; பொம்பள ஜென்மமே எடுக்கக் கூடாதும்மா''” என்றாள் சுந்தரி.
பதிலுக்குச் சந்திராவும், ""வெளியில் அனுப்பவும் பயமாயிருக்கு. வீட்லயும் காவல் காக்க முடியல''” என்றாள். “
""நீ சரியான காரியம் செஞ்ச சுந்தரி, பொண்ணுங்க ரெண்டு பேரையும் நல்ல நேரத்துலக் கல்யாணம் செஞ்சு முடிச்சுட்ட''” என்றார் சுந்தரேசன்.
""அதுவும் படிச்சு முடிச்சு வேலை கெடச்சதுக்கப்பறம்; யார் செய்வாங்க?''” என்றாள் சந்திரா.
""ஆமாம்மா... எங்க ஊட்டுக்காரரு செஞ்ச ஒரே நல்ல காரியம்மா அது''” என்று சொன்ன சுந்தரி, “""அவ்வளவு லேசா அவரு அதுக்கு ஒத்துக்கலம்மா; இப்பதாம் சம்பாதிக்கறாங்க... ரெண்டு வருசம் போகட்டும்னு சொன்னாரு. நான் சொன்னேன்... அப்பறம் காசைப் பாத்தா நாளைத் தள்ளிப் போடலாம்னுதான் தோணும். இதுங்களுக்குப் பாதுகாப்பு குடுக்க நம்மால முடியாதுன்னு நான்தான் ரெண்டு பேருக்கும் ஆறு மாசத்துல முடிக்கச் சொன்னேன்''” என்றுசொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.
அவள் சென்றபிறகு சுந்தரேசனுக்கு என்னென்னவோ சிந்தனைகள் வந்தன. ஏன் இப்படி எல்லாம் இப்பொழுது அதிகமாக நடக்கின்றன. காமம் அதன் காரணமாக எழும் வக்ரம், மூர்க்கம் பெருகக் காரணமென்ன? பெண்களைப் போகப் பொருளாக்கும் ஊடகங்களா? வேலை கிடைக்காமல் காலகாலத்தில் அனுபவிக்க முடியாத ஆத்திரமா? எந்த முடிவுக்கும் வர அவரால் முடியவில்லை.
அன்றும் அதே போல்தான் வாசலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது தெருவில் எல்லாரும் கூட்டம் கூட்டமாக ஓடினார்கள். சுந்தரேசன் எழுந்து ஒருவரை நிறுத்தி என்னவென்று கேட்டார். “
"" சுந்தரி புருசன் மாவுமில்லு பெல்ட்டுல மாட்டிக்கிட்டானாம்''” சொல்லிவிட்டு அவரும் ஓடிவிட்டார். சுந்தரேசன் உடனே சந்திராவையும் அழைத்துக் கொண்டு வண்டியில் ஊர்க்கோடியில் உள்ள மில்லுக்குப் போனார். அதற்குள் ஆறுமுகத்தைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள். அங்கே இருந்தவர்கள், ""போயிடுச்சு சாமி''” என்றார்கள்.
சுந்தரேசன் எப்படி நடந்ததென்று கேட்க பதிலுக்கு ஒருவர், ""எல்லாம் குடிதாங்க... நெதானத்துலதான் இருந்தானாம்; ஆனா திடீர்னு ஏதோ நெனப்புல நெல்லைக் கொட்டிட்டுக் கொஞ்சம் அப்பறம் நவுந்திருக்கான். பெல்ட் இருக்கறது கவனத்துல இல்ல. அதான்''” என்று கூறினார். “
""பாவம் சுந்தரி, அவளுக்கு நிம்மதியே இருக்காது போல இருக்கு... சாண் ஏறினா மொழம் சறுக்கறதுன்னு சொல்றது அவளுக்குதான் சரியாயிருக்கு. ஆனா அவன் இருக்கறதும் ஒண்ணுதான்... போயிட்டதும் ஒண்ணுதான்''” என்று சொல்லிக்கொண்டே வண்டியைச் செலுத்திக்கொண்டு வந்தார் சுந்தரேசன்.
மறுநாள் சுந்தரி வீட்டுக்குக் காலையிலேயே இருவரும் போனார்கள். இவர்களைப் பார்த்ததும் சுந்தரி ஓடிவந்து காலில் விழுந்தாள்.
""சாரு பாத்தீங்களா? என்ன இப்படி உட்டுட்டுப் போய் சேந்துட்டானே பாவி மவன். நான் இனிமே என்னா பண்ணுவேன். அம்மா, நான் எப்படி எப்படியெல்லாம் அவனைக் காப்பாத்தினேன்னு ஒங்களுக்குதாம்மா தெரியும். இப்ப காப்பாத்த முடியலியே. ஒரே பொட்டலமா கட்டிக் குடுத்திட்டாங்களே... நான் என்னா செய்வேன்''” என்று கதறிக்கொட்டி விட்டாள். அவளின் மகள்கள் இருவரும் வந்து சுந்தரியைச் சமாதானம் செய்து இழுத்துக் கொண்டு போனார்கள். சுந்தரேசனுக்கும் அவர் மனைவிக்கும் அவர்களின் சொந்தமே அழுவது போல இருந்தது. இருவரும் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.
பதினைந்து அல்லது இருபது நாள்கள் கடந்திருக்கும். அன்றும் சுந்தரேசன் வாசலில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். காலை மணி ஒன்பது இருக்கும். பள்ளி செல்லும் பிள்ளைகள் சுமக்க முடியாத புத்தக மூட்டையை முதுகில் மாட்டிக்கொண்டு, கைகளில் சாப்பாட்டுக் கூடையுடன் போய்க்கொண்டிருந்தனர். வழக்கமாக வரும் தள்ளுவண்டிக்காரன் "கீரேய்'” என்று கத்திக் கொண்டு போனான். “"கீரை வாங்கலியா?'” என்று அவர் உள்ளே கேட்கும் படிச்சொல்ல அவர் மனைவி, “""வேண்டாம், வாழைத்தண்டு இருக்கு''” என்று கூறிக்கொண்டே அரிவாள்மனையுடன் வாழைத்தண்டுடன் வாசலுக்கு வந்து உட்கார்ந்தாள்.
அப்போதுதான் “"அப்பாடா'” என்று சொல்லிக்கொண்டே பெருமூச்சுடன் சுந்தரி வந்து உட்கார்ந்தாள். சிறிது
நேரம் யாருமே பேசவில்லை. சுந்தரேசன் மனைவி ""என்னா சுந்தரி காரியம்லாம் ஆயிடுச்சா?''” எனக் கேட்டாள்.
""ஆயிடுத்தும்மா; எந்த செலவை நிறுத்த முடியுதம்மா? கடன் வாங்கியாவது செய்ய வேண்டியதை செஞ்சுதான தீரணும்?'' என்று சொன்னாள். ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக சுந்தரேசன், ""“பொண்ணுங்களாம் போயிடுச்சா?''” என்று கேட்டார். “
""ஆமாம் சாரு” எத்தினி நாள் அவங்க ஊட்ட உட்டுட்டு இருக்க முடியும்?''” என்று பதில் சொன்னாள். மீண்டும் அவளே பேசினாள், “""எனக்குதான் ஊட்ல தனியா எப்படி இருக்கறதுன்னு தெரியல. ஊட்ல எங்க திரும்பினாலும் அவன் நிக்கற மாதிரிதான் இருக்கு''” என்றாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் அழுது விடுவாள் போல இருந்தது.
சுந்தரியைச் சமாதானம் செய்வது போல சந்திரா, ""ஆனா ஒனக்கு இனிமே அடி ஒதை எல்லாம் இருக்காது. ஊட்ல
சண்டைசாடி வராது. நிம்மதிதான்''” என்று கூறினாள்.
உடனே சுந்தரி, ”என்னாம்மா நிம்மதி? இனிமேதாம்மா பயமா இருக்கு? ஒரு பாதுகாப்புக்காவது அவன் இருக்கான்னு இருந்திச்சு. இப்ப அதுவும் போயிடுச்சும்மா; ராத்திரியிலே எந்தக் கழுதை எப்ப வந்து கதவைத் தட்டுமோன்னு நிம்மதியாவே தூங்கவே முடியலம்மா... பயமா இருக்கும்மா. அசலூர்ல ஒரு சொந்தக்காரக் கெழவி ஒண்ணு இருக்குது, அதைக்கொண்டாந்து வச்சிக்கலாம்னு பாக்கறேன்''” என்றாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.