

கண்டது
(திருநெல்வேலி திருமணவால்போஸ்டர் ஒன்றில் கண்ட வாசகம்)
அழைக்காமல் வருபவர்கள் ஆண்டவனுக்குச் சமமானவர்கள்.
க.சரவணகுமார், திருநெல்வேலி-11
(நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
பொருள்வைத்த சேரி
-வி.சி. கிருஷ்ணரத்னம், சென்னை.
(பொட்டல் விலக்கு, தெற்கு சூரங்குடியில் ஒரு பழமுதிர் நிலையத்தின் பெயர்)
"கொரோனா' பழமுதிர் சோலை
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
கேட்டது
(நாகர்கோவில் ரயில்வே ரோட்டில் இரு நண்பர்கள்)
""மச்சி எங்க வீட்டு நாய், இப்பெல்லாம் என்னைக் கண்டால் வால் ஆட்டுவதில்லை''
""எல்லா நாயும் அப்படித்தான் மாப்ள... நாம் பழகப் பழக அதுக்கு திமிரு வந்திடுது!''
""?...?...?''
மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.
(சிதம்பரத்தில் கொத்தங்குடி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மனைவி கணவனிடம்)
""ஏங்க...சும்மாதானே
இருக்கீங்க? கொசுவத்திய சுத்தி, நிறைய கொசுக்கள், மயங்கி
கிடக்கு...அதை, அப்படியே நசுக்கி விடுங்க... இல்லேனா, மயக்கம் தெளிஞ்சி பறந்துடும்.
ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்- 1
யோசிக்கிறாங்கப்பா!
பார்க்குமிடமெல்லாம்
கைப்பேசி முளைத்து விட்டதால்...
களையெடுக்கப்பட்டுக்
கிடக்கிறது, தபால்பெட்டி.
மு.கௌந்தி, சென்னை.
மைக்ரோ கதை
ரகு எதிர்பார்த்தபடியே ஆபீஸில் இரண்டே வாரத்தில் அவனுக்கு டிரான்ஸ்பர் ஆர்டரை கையில் கொடுத்தார் மேனேஜர்.
கொஞ்ச நாளாகவே ஆபீஸில் ரகுவுக்கும் மேனேஜருக்கும் "ஏழாம் பொருத்தமாக' இருந்தது. இடையில் அது பெரிய சண்டையாக வந்து முடிந்தது.
இரண்டு வாரங்கள் அமைதி காத்த மேனேஜர் நேற்று ரகுவை அழைத்தார்.
""உனக்குப் பிடிக்காத பத்து ஊர் பெயர்களை எழுதிக் கொடு!'' என்று கேட்டார். ரகுவும் எழுதிக் கொடுத்து விட்டு வந்தான்.
இன்று டிரான்ஸ்பர் ஆர்டரை கையில் வாங்கிய ரகு முகத்தில் வருத்தம் ஏதும் இல்லை.
ஆபீஸில் அவருடன் நெருங்கிப் பழகும் அமுதன் முகத்தில் ஆச்சரியம்!
""உனக்குப் பிடிக்காத ஊர் பெயர்களை கேட்டு அதில் ஒரு ஊருக்கு உன்னை மேனேஜர் டிரான்ஸ்பர் பண்ணி இருக்காரே! உனக்கு வருத்தமாக இல்லையா?'' என்றான்.
ரகு சிரித்துக் கொண்டே பதில்சொன்னான்:
"நான் எழுதிக் கொடுத்தது எனக்குப் பிடிக்காத ஊர்களை அல்ல. எனக்கு மிகவும் பிடித்த ஊர்களின் பெயர்களைத்தான் எழுதிக் கொடுத்தேன். அதில் ஓர் ஊர் என் சொந்த ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர். நான் எதிர்பார்த்தது போல அதற்கே என்னை டிரான்ஸ்பர் பண்ணி ஆர்டர் தந்திருக்கார் மேனேஜர்'' என்றான் மகிழ்ச்சியுடன்.
கு.அருணாசலம், தென்காசி.
எஸ்.எம்.எஸ்.
வாசல்படியும், பிரச்னையும் ஒண்ணு தாங்க...
எப்படின்னு கேக்கறீங்களா?
ரெண்டுமேதான் வீட்டுக்கு வீடு இருக்கே.
-வி. ரேவதி, தஞ்சை
அப்படீங்களா!
அமெரிக்காவிலுள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா - ரிவர்சைட்' ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த ஆராய்ச்சி முடிவு "ஜர்னல் ஆஃப் எக்ஸ்பெரிமென்டல் பயாலஜி' என்ற இதழில் வெளியாகியுள்ளது.
அவர்களுடைய ஆராய்ச்சிக்கு எலிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். எலிகளுக்கு நிறைய இனிப்பும், கொழுப்புச் சத்தும் உள்ள மேற்கத்திய உணவு களைத் தந்திருக்கிறார்கள். மூன்று வாரங்கள் இம்முறையில் அந்த எலிகளைப் பராமரித்துவிட்டு அப்புறம் வழக்கமான உணவுகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்குப் பிறகு 14 வாரங்கள் கழித்து அந்த எலிகளை ஆராய்ந்து பார்த்ததில் சில வியக்கத்தக்க தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இனிப்பும், கொழுப்பும் நிரம்பிய மேற்கத்திய உணவை உண்ட அந்த எலிகளின் குடல்களில் உள்ள, "உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள்' ஆகியவற்றின் அளவு, குறைந்துவிட்டதை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றின் தொகுதியை மைக்ரோபயோமி என்று அழைக்கிறார்கள்.
நலமாக உள்ள மனித உடலில், நோயை ஏற்படுத்தும் தன்மையும், நோயை எதிர்க்கும் தன்மையும் சமமான அளவில் இருக்கும். இதில் சமன்நிலை குலைந்தால் நோய் ஏற்பட்டுவிடும். நோயை எதிர்க்கும் தன்மை உள்ள மைக்ரோபயோமியின் அளவு இனிப்பு, கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் குறைந்துவிடுகிறது என்பதையே இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
எலிகளுக்கு கொடுத்த உணவைப் போல குழந்தைகளுக்குக் கொடுத்து பார்த்திருக்கிறார்கள். அதே விளைவையே குழந்தைகளிடமும் அந்த உணவு ஏற்படுத்தி இருக்கிறது.
குழந்தைப் பருவத்தில் உண்ட உணவால் குடலில் நிகழ்ந்த மாற்றங்கள், அவர்கள் வளர்ந்த பிறகும் தொடரும். இதனால், பெரியவர்கள் இப்போது என்ன சாப்பிடுகிறார்கள் என்பது மட்டும் அவர்களுடைய உடல் நலத்தைத் தீர்மானிப்பதில்லை; குழந்தைப் பருவத்தில் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதும் தீர்மானிக்கிறது என்பதே ஆராய்ச்சியின் முடிவாக உள்ளது.
என்.ஜே., சென்னை-58.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக வெற்றியும் தலைகீழாக மாறிய அதிமுகவும்: வைகோ

புதுச்சேரி: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் இழுபறி! முதல்வர் அவசர ஆலோசனை!
ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு டிரம்ப் இரு நாள் கெடு!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்!
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

