தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சிரி... சிரி...

''பொண்ணுக்கு கொஞ்சம் வாய் நீளம். பரவாயில்லையா தம்பி...''''அதை எங்க அம்மா சரி பண்ணிடுவாங்க.. அவங்களுக்கும் கை நீளம்தான். தரகர் சார்...''

News image
Updated On :31 டிசம்பர் 2023, 11:54 am


''இந்தப் பெண்ணுக்கு ஹிந்தி, தெலுங்குன்னு பல மொழிகள் தெரிஞ்ச மாப்பிள்ளைதான் வேணுமுன்னு அடம்பிடிக்கிறா?''
''எதுக்கு...''
''தன்னுடைய அழகை வர்ணிக்க பல மொழிகளில் பேசற மாப்பிள்ளைதான் வேணுமாம்!''




''மணப்பெண்ணு குனிஞ்ச தலை நிமிர மாட்டான்னா பாருங்களேன்..''
''நிஜமாவா?''
''ஆமாம். எப்ப பார்த்தாலும் வாட்ஸ் ஆஃப், யூ டியூப் 
பார்த்துகிட்டே இருப்பா?''

-தீபிகா சாரதி, சென்னை.

''தரகர் தொழிலை விட்டுவிடலாமுன்னு இருக்கேன்..''
''கல்யாணம் பண்ணுற நல்ல காரியம் செய்கிறீங்க ஏன் சார் இந்த முடிவு..''
''நிறைய பேரோட வயிற்றெரிச்சலை கொட்டிக்கிறேனே..''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

''ஆறுமுகம் நினைச்ச மாதிரியே அவரோட மகளுக்கு வீட்டோட மாப்பிள்ளை அமைந்ததாமே.. உண்மையா?''
''ஆமாம். முதியோர் இல்லத்துல இருந்த மாப்பிள்ளையாம். அதான்!''

-கு. அருணாசலம், தென்காசி.

''மாப்பிள்ளை கஞ்ச பேர்வழின்னு எப்படி சொல்றே?''
''சாப்பிடுற மாதிரி கனவு வந்தாகூட அடுத்த வேளை சாப்பிட மாட்டாரு?''

- எஸ்.மாரிமுத்து, சிட்லபாக்கம்.

''வயசானவங்களை குடி வைச்சா தலைவலின்னு புதுமண ஜோடிக்கு வீட்டை வாடகை விட்டது தப்பாயிடுச்சி..''
''ஏன் என்ன ஆச்சு..''
''தினமும் சண்டை போட்டு எங்களை சாக அடிக்கிறாங்க?''



''பொண்ணுக்கு கொஞ்சம் வாய் நீளம். 
பரவாயில்லையா தம்பி...''
''அதை எங்க அம்மா சரி பண்ணிடுவாங்க.. அவங்களுக்கும் கை நீளம்தான். தரகர் சார்...''



''பையன் பிரஸ் நடத்தறான் சார்...''
''மாசம் எவ்வளவு பணம் கிடைக்கும் தரகரே..''
''பிரின்ட் பண்ணதைப் பொறுத்துதான்!''



''என்ன டார்லிங்.. நம்ம திருமணத்துக்கு எங்க அம்மாவும் அப்பாவும் சம்மதிச்சிட்டாங்க..''
''பராவாயில்லையே. ஆனா என் மனைவியும்,  குழந்தைகளும் சம்மதிக்க மாட்டங்களே!''



''பெண்ணோட அப்பா யாரையும் நம்ம மாட்டாராம்..''
''எப்படி சொல்றே?''
''அவரே மொய் பணத்தை வசூல் பண்றான்னா பார்த்துக்கோங்க?''



''எது எப்படி வந்ததோ  அது அப்படியோ போகும்டா?''
''என்னடா பெரிய உபதேசம் சொல்றே..?''
''ஒரு கல்யாணத்துல திருடிய செருப்பு அடுத்த கல்யாணத்துல போயிடிச்சிடா?''



''இந்த வயசுல கூட அந்த தாத்தாவும் பாட்டியும் பீச்சுல சந்தோஷமா உட்கார்ந்து பேசிட்டே இருக்காங்களே!''
''அவங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு வீட்டுல சம்மதம் இல்லாததால், காதலர்களாகவே இருக்காங்கடா?''

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.