சிரி... சிரி...

''மனைவியை காணோமுன்னு டி.வி.யில் விளம்பரம் பண்ணது தப்பாச்சு!''''ஏண்டா?''''டி.வி.யில் காட்டுறாங்கன்னு அடிக்கடி காணாமல் போயிடறா?''
சிரி... சிரி...

'ஊசி போட்டதும் கையை தேய்ச்சு 
விட்டதுக்காகவா, அந்த நர்ஸ் உன்னை அடிச்சாங்க?'
'இல்லடா. நான் தேய்ச்சது அவங்களோட கையை ஆச்சே?'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

-------------------------------------

'நூறில் ஒன்று போனால் என்னடா?'
'இரண்டு பூஜ்ஜியங்கள்தானே!'

டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

-------------------------------------

' உன் பையனுக்கு வயசாகிட்டே போகுது.  வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டியாடா?'
'இப்பதான் சாப்பாட்டுல 'மெயின் டிஷ்'  செய்ய பழகியிருக்கான். 'சைட் டிஷ்' செய்ய பழகட்டும். அப்புறம் பார்கலாம்.'

என்.கே.மூர்த்தி, சென்னை.

-------------------------------------

'நம்ப வார்டு கவுன்சிலர் அடிக்கடி உன் வீட்டுக்கு வர்றாரே! நீயும் அரசியலில் இறங்கிட்டியா?'
'இல்லடா, அவர்கிட்டேயும் கடன் வாங்கிட்டேன்!'

கு.அருணாசலம், தென்காசி.

-------------------------------------


'ஏன்டா? தூங்கினதுக்கா அந்த ஆளை போலீஸ் பிடிச்சிட்டு போகுது!'
'ஆம். அவன் தூங்கினது திருட போன இடத்துல?'

தீபிகா சாரதி, சென்னை.


-------------------------------------

'சிரிச்சா நான் அழகா இருக்கேனா?'
'நீ கொட்டாவி விட்டாலும் அது அழுகுதான்?'



'வண்டி வண்டியாய் பொய் சொல்லிட்டு இருந்தவன் இப்ப எப்படி இருக்கான்!'
'வண்டி பத்தலைன்னு மேற்கொண்டு ரெண்டு வண்டி வாங்கிட்டான்!'
பர்வதவர்த்தினி, பம்மல்.
'பெண்டாட்டி காணோம்னு ஒரு வாரம் கழிச்சி , போலீஸ் ஸ்டேஷன் புகார் கொடுக்க வந்திருக்கீங்க?'
'போன தடவை காணாமல் போனப்ப மறுநாளே வந்ததுக்கு அதுக்குள்ளே என்னய்யா அவசரம்னு கேட்டீங்களே சார்... அதான்!'




'டி.வி.சீரியல்னா ஜவ்வு மாதிரி இழுப்பாங்க சரி.  'அந்த சீரியல்' ரொம்ப ஓவர்டா'
'ஏன்டா?'
'ஹிரோயின் முழுகாமல் இருக்கற மாதிரி ரெண்டு வருஷமா காட்டுறாங்களே!'



'என் கனவுல ஜாக்சன் வந்ததும் ஆடிப்போயிட்டேன்!'
'மைக்கேல் ஜாக்சனாடா?'
'இல்லை. எமி ஜாக்சன்!'



'மனைவியை காணோமுன்னு டி.வி.யில் விளம்பரம் பண்ணது தப்பாச்சு!'
'ஏண்டா?'
'டி.வி.யில் காட்டுறாங்கன்னு அடிக்கடி காணாமல் போயிடறா?'




'தூக்கத்துல கூட மனைவிக்கு அவர் பயப்படுவார் போலிருக்கே?'
'எப்படி சொல்றீங்க?'
'தூக்கத்துல அந்தம்மா பல்லை கடிக்குதுன்னு திண்ணையில் போய் படுக்கிறாரே?'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com