செஸ் படை...

2026 கிராண்ட் செஸ் போட்டிகளுக்கான போட்டியாளர்கள் தேர்வுப் பட்டியலை சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
செஸ் படை...
Published on
Updated on
1 min read

2026 கிராண்ட் செஸ் போட்டிகளுக்கான போட்டியாளர்கள் தேர்வுப் பட்டியலை சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இந்திய போட்டியாளர்கள் புதிய உயரடுக்கு வீரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

எஃப்.ஐ.டி.இ. கிராண்ட்சுவிஸ் நான்காவது போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் செப்டம்பர் 3 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் 56 பெண் வீராங்கனைகள் உள்பட 172 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

விதிமுறைகளின்படி, முதல் இரு தகுதிச் சுற்றுகளில் தரவரிசையில் இடம்பெறுபவர்கள், 2026 போட்டிக்குத் தகுதி பெறுவார்கள். உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியாளர்களும் இந்தப் போட்டியில்தான் தீர்மானிக்கப்படுகின்றனர்.

2025 கிராண்ட் தகுதிச் சுற்றில் பரிசுத் தொகை ஆண்களுக்ககு 4.60 லட்சம் டாலர்களில் இருந்து 6 .25 டாலர்களாகவும், பெண்களுக்கு 1.40 லட்சம் டாலர்களிலிருந்து 2.30 டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி சார்பில் இளம்வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, உலக சாம்பியன் குகேஷ் ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களிலும், பிரக்ஞானந்தா நான்காவது இடத்திலும் உள்ளான. விதித் சந்தோஷி குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, நிஹால் சரின், ரவுநக் சத்வாணி, முரளி காத்திகேயன், அபிமன்யு புராணிக், ஆர்யன் சோப்ரா, லியோன் லுக் மென்டோன்கா, நாராயணன் போன்றோர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

முதல் பத்து இடங்களில் அதிக அனுபவமுள்ள கிராண்ட்மாஸ்டர்களான இயன் நெபோம்னியாச்சி, அனிஷ் கிரி, ஷக்ரியார் மமெத்யரோவ், லெவன் அரோனியன், விளாடிமிர் ஃபெடோசீவ் இடம்பெற்றுள்ளனர்.

'ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரை நடைபெற்ற போட்டிகளில் , 30 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், கிளாசிக்கல் தர வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டும்' என்ற புதிய விதிமுறையின் காரணமாக, இரண்டு முன்னாள் உலக சாம்பியன்களான மேக்னஸ் கார்ல்சன், விஸ்வநாதன் ஆனந்த், முந்தைய கிராண்ட் சுவிஸ் போட்டிகளில் பங்கேற்ற ஹெவிவெயிட் வீரர்களான லு குவாங் லீம், பீட்டர் ஸ்விட்லர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் போட்டியில் சேர்க்கப்படவில்லை.

மதிப்பீட்டின்படி 2026 போட்டிக்குத் தர வரிசையின்படி, நேரடியாகத் தகுதி பெற்றிருப்பதால், முன்னாள் உலக சாம்பியன் டிங் லிரென், முந்தைய மூன்று கிராண்ட் சுவிஸ் போட்டிகளிலும் விளையாடிய ஃபேபியானோ கருவானாவும் 2025 போட்டியில் பங்கெடுக்கமாட்டார்கள்.

பெண்கள் கிராண்ட் சுவிஸில், 44 வீரர்கள் மதிப்பீட்டின் மூலம் தகுதி பெற்றுள்ளனர். கான்டினென்டல் இடங்களிலிருந்து நான்கு கூடுதல் வீரர்கள் இணைகிறார்கள், நான்கு பேர் 'எஃப்.ஐ.டி.இ.' வைல்ட் கார்டுகள் வழியாகவும், மேலும் நான்கு பேர் உள்ளூர் அமைப்பாளரின் பரிந்துரைகளாகவும் உள்ளனர்.

மகளிர் கிராண்ட் சுவிஸ் போட்டி பட்டியலில் முன்னாள் மகளிர் உலக சாம்பியன் டான் ஜோங்கி முதலிடத்தில் உள்ளார். அனுபவமிக்க ஹம்பி கொனேரு, ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அக்ராவால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com