புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

துரோகம் பழகு

மகிழ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'துரோகம் பழகு.'

Published On :

மகிழ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "துரோகம் பழகு.' இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சீயோன் ராஜா. தக்ஷன் விஜய், லொள்ளு சபா ஜீவா, "வாழை' ஜானகி, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பேசுகிறது.

"சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை' என்ற அழுத்தமான ஒன்-லைனுடன் வெளியாகியுள்ள "துரோகம் பழகு' முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. புதுமுகம் பாலா மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளார்கள். வைரமுத்து எழுதியுள்ள படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக அமைந்து, படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

தக்ஷன் விஜய் இப்படத்தில் தனது நடிப்பு, சண்டைக் காட்சிகளில் சிறப்பான பயிற்சியுடன், கதாபாத்திரத்துக்குத் தேவையான உணர்வுகளையும் ஆக்ஷனையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக "துரோகம் பழகு' உருவாகியுள்ளது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.