புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஸ்டெதாஸ்கோப்

ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்குரிய சின்னங்கள் உண்டு. அந்த வகையில் மருத்துவர் என்றால் வெள்ளைக்கோட்டும், ஸ்டெதாஸ்கோப்பும் வைத்திருப்பார்.

ஸ்டெதாஸ்கோப்

Published On :

ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்குரிய சின்னங்கள் உண்டு. அந்த வகையில் மருத்துவர் என்றால் வெள்ளைக்கோட்டும், ஸ்டெதாஸ்கோப்பும் வைத்திருப்பார். வெள்ளைக்கோட்டை வேறு துறையினரும் பயன்படுத்துகின்றனர். ஆக மருத்துவரின் நிஜ சின்னம் ஸ்டெதாஸ்கோப். சிலர் கழுத்தில் அணிந்திருப்பர். பலர் அதனை கோட்டு பாக்கெட்டுக்குள் மடித்து வைத்திருப்பர். சிலர் கெளரவ சின்னம் போல் கையில் வைத்திருப்பர்.

இதயம், நுரையீரல், வயிறு உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஓசைகளைக் கேட்க உதவும் இந்தக் கருவியை 1816-ஆம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த மருத்துவர் ரெனே லென்னெக் என்பவர் கண்டுபிடித்தார். இதன் இரு காது பொருத்துப் பகுதியானது,1851- ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

செஸ்பீஸ் என்பதை தோலில் வைத்தும், டியூபிங் ஒலியை காதுக்குக் கொண்டு சென்றும், இயர் பீஸ் உலோகமும் மூளைக்கவசமும் என ஸ்டெதாஸ்கோப் மூன்று பகுதிகளைக் கொண்டது. இதனை வைத்து இதயத் துடிப்பு, அதன் சீரற்ற ஓசைகளைக் கண்டறியவும், நுரையீரலில் உள்ள காற்றுப் பாதையின் ஒலிகளைக் கேட்கவும், ரத்த அழுத்தத்தை அளவிடவும் முடியும்.

'ஸ்டெதாஸ்கோப் மூலம் கேட்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நோயைக் கண்டறியும் திறன் குறைந்து வருகின்றது' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஸ்டெதாஸ்கோப்புகள் ரூ.300 முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கின்றன. டிஜிடல்ஸ் டெதாஸ்கோப்புகளின் விலை ரூ.30 ஆயிரம். ஸ்மார்ட் போன் செயலியுடன் வேலை செய்யும் ஸ்டெதாஸ்கோப் 2015-ஆம் ஆண்டில் அறிமுகமானது. 3டி

முறையில் அச்சிடப்பட்ட ஸ்டெதாஸ்கோப்பும் வந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.