பல லட்சங்கள் செலவு செய்து பி.இ., எம்.பி.ஏ., படித்துவிட்டு, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி திண்டாடி வரும் சூழலில், மதிப்புமிக்க ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை பெற்றுத்தரக் கூடிய துறையாக அனிமேஷன் துறை வளர்ந்து வருகிறது.
கல்வித் தகுதியைக் காட்டிலும் கற்பனைத்திறன், புதிய சிந்தனை, அந்தச் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் திறமையைப் பெற்றிருப்பவர்கள், இத்துறையில் பிரகாசிக்க முடியும்.
""அவ்தார், ஷ்ரெக், குங் ஃபு பாண்டா, ஹனுமன்' உள்ளிட்ட அனிமேஷன் திரைப்படங்கள் வெளியாகி, வரவேற்பை பெற்ற பிறகு இத்துறையின் மீது கவனம் அதிகரித்துள்ளது.
உலக அளவில் பலகோடிகள் புரளும் துறையாக, அனிமேஷன் துறை வளர்ந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ரூ. 1,740 கோடி மதிப்புடையதாக இத்துறை விளங்கி வருகிறது. 2013-ல் இதன் மதிப்பு ரூ. 3,900 கோடியாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி செய்தி, விளம்பரம், வர்த்தகப் படங்கள், விடியோ விளையாட்டுகள், இணைய வழிக் கல்வி, மருத்துவத் துறை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனிமேஷன் பயன்படுத்துப்படுகிறது.
நம்முடைய கற்பனைகளுக்கு கண்ணைக் கவரும் வண்ணங்களுடன் வடிவம் கொடுத்து, உயிர் பெறச் செய்வதுதான் அனிமேஷனின் முக்கிய பங்கு.
என்னென்னெ பிரிவுகள்? 2டி அனிமேட்டர், 3டி அனிமேட்டர், வெப் டிசைனர், ஸ்பெஷல் எஃபெக்ட் டிசைனர், கிராஃபிக் டிசைனர், விசுவலைஸர், கம்ப்யூட்டர் விளையாட்டு டிசைனர் உள்ளிட்ட பிரிவுகள் இத்துறையில் உள்ளன.
2டி, 3டி அனிமேட்டர் பயிற்சிகளைப் பெறுபவர்கள் அனிமேஷன் படங்களில் வடிவமைப்பு, மாடலிங் துறை உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
வெப் டிசைனர் பயிற்சி முடிப்பவர்கள் மாடலிங், எலக்ட்ரானிக் மீடியா உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
ஸ்பெஷல் எஃபெக்ட் டிசைனர்கள் பொழுதுபோக்கு துறையில் அதிக வேலைவாய்ப்புகளை பெற முடியும். கிராஃபிக் டிசைனர்களுக்கு போஸ்ட்டர்கள், குறியீடுகள், பத்திரிகை துறை, டிவி சேனல்கள், நகை வடிவமைப்புத் துறை உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
விசுவலைஸர்களுக்கு பத்திரிகை, மாத இதழ், விளம்பரத் துறைகளில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எவ்வளவு சம்பளம்?: இப்பயிற்சிகளை பெறுபவர்கள் ஆரம்பகட்ட ஊதியமாக ரூ. 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை திறமைக்கு ஏற்ப ஊதியம் பெற முடியும். அனுபவம் பெற்ற பின் ரூ. 50 ஆயிரமும் அதற்கு மேலும் ஊதியம் கிடைக்கும்.
காலிப் பணியிடங்கள் எவ்வளவு?: அனிமேஷன் துறை தமிழகத்தில் இப்போதுதான் வளர்ச்சி பெற்று வருகிறது. ஹைதராபாத் இத்துறையில் முன்னனியில் உள்ளது. இந்தியா முழுவதும் இத்துறையின் கீழ் இந்த ஆண்டில் 35 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று "மா ஃபா' மனிதவள நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.
கல்வித் தகுதி என்ன?: அனிமேஷன் பிரிவில் சான்றிதழ் படிப்புகளை பெற 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தவறியவர்களாக இருந்தால்கூட போதும். இந்த நிலையில் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகள் கொண்டுவரப்பட்டன. இந்த படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


