நீங்கள் நிறுவனமொன்றில் பணி புரிந்து கொண்டிருந்தாலும் சரி- சுயதொழிலை மேற்கொண்டிருந்தாலும் சரி - மேன்மேலும் முன்னேறிக் கொண்டேயிருக்க வேண்டும். என்னதான் முழுமூச்சுடன் வேலை பார்த்தாலும், சில பேர் இருந்த இடத்திலேயே இருப்பார்கள். அதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.
என்ன குறை என்பதைத் தெரிந்து கொண்டு, அதைச் சரி செய்தால் முன்னேற்றம் நிச்சயம்.
எந்த வேலையிலும் ஆர்வமும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற துடிப்பும் இருப்பது அவசியம். குறிப்பாகக் கணினித் துறை என்றால், நிறுவனத்துக்குத் தேவையான மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருத்தல் உசிதம்.
எதிர்பாராத இடர்களையும், தற்காலிகத் தோல்விகளையும் சந்திக்கப் பழகிக் கொள்ளுங்கள். (முன்னது சுயதொழிலில் ஏற்படலாம்)
என்னதான் வேலை செய்தாலும், ஏதாவது ஒரு வருடம் "செயல்திறன் மதிப்பீட்டில்' (Performance Appraisal) எண் கம்மியாக இருக்கலாம். காரணம், உள்ளுணர்வுக்குத் தெரிந்திருக்கும். திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
வம்பு பேசாதீர்கள்.
உங்கள் வேலைப் பாதையில் யாரேனும் சக ஊழியர் ஒருவர் நல்ல ஒத்துழைப்பு தந்திருக்கக் கூடும். ஏதாவது புராஜக்ட் வெற்றிகரமாக முடிவதற்கு, அவர் காரணமாக இருந்திருக்கலாம். தக்க தருணத்தில் அவரைப் பாராட்டுங்கள். இதனால் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படாது.
சோர்வு ஏற்படும் சமயங்களில், பழைய வெற்றிகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு காலகட்டத்தில் வேலை கிடைக்காமல் அலைந்திருப்பீர்கள்; அல்லது மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பீர்கள், அவற்றைத் தாண்டித்தானே இந்த நிலையை அடைந்திருக்கிறீர்கள்? அந்தப் பழைய காலங்களை எண்ணிப் பார்த்தால், மனத்துக்குள் ஓர் உத்வேகம் பிறக்கும்.
புதிய சூழல்களைக் கண்டு மருட்சி அடைய வேண்டாம். இது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணி உற்சாகத்துடன் வேலையில் ஈடுபடுங்கள். குறிப்பாக, இது விற்பனைப் பிரதிநிதிகளுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
காக்காய் பிடிக்காதீர்கள், ஏதாவது ஒரு பொருத்தமான சூழலில் "பாûஸ'ப் பாராட்டலாம். தவறில்லை. தொடர்ந்து அற்ப விஷயங்களுக்கெல்லாம் "ஆமாம்' போட்டுக் கொண்டிருந்தால், உங்கள் மீதே மேலிடத்துக்கு நம்பிக்கை போய்விடும்.
""மட்டும்''கள் வேண்டாம். "எனக்கு மட்டும் பெரிய வீடு இருந்தால்' ""...கம்பெனியில் வேலை கிடைத்திருந்தால்'' போன்ற எண்ணங்கள் வேண்டாம். ""இன்று புதிதாய்ப் பிறந்தோம்'' என்ற பாரதியின் வாசகத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்

வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை: ஆட்சியா்

அடித்தளம் ஆட்டம் காண்கிறது!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


