தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விமானத்தை பறக்க வைக்கும் "புல்'

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.   விமானத்தை பறக்க வைக்கும் எரிபொருளாக அந்த புல் மாறும் நாள் வெகு

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 5:20 am

அ. சர்ஃப்ராஸ்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.   விமானத்தை பறக்க வைக்கும் எரிபொருளாக அந்த புல் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
 ஆம். பெல்ஜியம் நாட்டின் கென்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வில் புதிய சாதனையை படைத்துள்ளனர். இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி வே செர்ன் கேர் கூறுகையில், ""தற்போது விலங்குகளுக்குத் தீவனமாக மட்டுமே புல் பயன்பட்டு வருகிறது. அந்தப் புல்லை பயோ எரிசக்தியாகவும் பயன்படுத்தலாம். உலகம் முழுவதும் புல்வெளிகள் படர்ந்து உள்ளதால் எதிர்கால பயோ எரிசக்திக்கு உகந்ததாக புல் இருக்கும். இதற்காக புல்லுடன் பாக்டீரியாவை சேர்த்து லாக்டிக் ஆசிடாக மாற்ற வேண்டும். பின்னர் அதை பயோ எரிபொருளாகப் பயன்படுத்தலாம். அதையும் பல்வேறு கட்ட ஆய்வுகளின் மூலம் அதை விமான எரிபொருளாக மாற்றலாம். தற்போது புல்லில் இருந்து எடுக்கப்படும் சிறிய அளவு எரிபொருளுக்கு அதிகமாகச் செலவாகிறது. இதை வர்த்தகரீதியில் நாம் உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் செலவு குறையும். இதை வரும் ஆண்டுகளில் நாங்கள் செய்து காண்பித்து சாதனை படைப்போம்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வே செர்ன் கேர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.