கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிடச் சென்ற உணவகத்தில் அவர்கள் உணவருந்திய பின், பில்லை செலுத்தி விட்டு கிளம்ப முனைகிறார்கள்.

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 11:03 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிடச் சென்ற உணவகத்தில் அவர்கள் உணவருந்திய பின், பில்லை செலுத்தி விட்டு கிளம்ப முனைகிறார்கள். அப்போது அங்குள்ள சர்வரிடம் புரொபஸர், கணேஷ், ஜூலி ஆகியோர் உரையாடும்போது, finally மற்றும் eventually ஆகிய சொற்களுக்கு இடையிலான வித்தியாசம் என்ன எனும் கேள்வி வருகிறது. இதற்கு பதில் அளிக்குமாறு சர்வரை புரொபஸர் வேண்டுகிறார். அவன் ஓர் ஒட்டகக் கதை மூலம் இதை விளக்க முயல்கிறான். ஒரு பாலைவனத்தில் ஒரு கூடாரத்தில் கடுங்குளிரான இரவொன்றில் ஓர் அரபி தூங்குகிறார். வெளியே இருக்கும் அவரது ஒட்டகம் தனது தலையை மட்டும் கூடாரத்துக்குள் வைத்துக் கொள்ளலாமா என கெஞ்சுகிறது. அரபி சரி என்கிறார். அடுத்து என்ன ஆனது?

சர்வர்: ஒட்டகம் இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் கழுத்து, மார்பு, முன்னங்கால்கள், பின்னங்கால்கள் என உள்ளே கொண்டு வந்தது. கூடாரத்தில் இதற்கு மேல் இடமே இல்லை. ஒட்டகத்துக்கோ வாலை உள்ளே இழுக்க வேண்டும். ஊண்ய்ஹப்ப்ஹ் அது அரபியை பிடித்து வெளியே தள்ளி விட்டு முழுக் கூடாரத்தை ஆக்கிரமித்தது. இப்படி ஊண்ய்ஹப்ப்ஹ் - ஐ பயன்படுத்தலாம்.

புரொபஸர்: Eventually?

சர்வர்: சரி, அடுத்து இக்கதையை கற்பனையாய் நீட்டிக்கிறேன். இந்த அரபி சில மாதங்களுக்குப் பிறகு அதே ஒட்டகத்துடன் அதே பாலைவனத்தில் அதே போலொரு கடுங்குளிர் இரவில் தங்க நேர்கிறது என வைப்போம். இம்முறையும் அவர் தூங்கிக் கொண்டிருக்கையில் ஓர் அரவம் கேட்டு எழுந்து கொள்ளப் போகிறார்.

புரொபஸர்: சரி

சர்வர்: பார்த்தால் அதே ஒட்டகம். அதே வசனம். அரபி, ""சரி, தலையை மட்டும் உள்ளே விட்டுக்கோ'' என்று சொல்வார். ஒட்டகமும் குஷியாய் தலையை உள்ளே நுழைக்கும். சற்று நேரம் கழித்து அது மீண்டும் அழும். அரபி எரிச்சலாய், ""என்ன வேண்டும் இப்போ?'' என கேட்பார். ஒட்டகமோ முன்பு சொன்ன அதே வசனத்தைச் சொல்லும். ""கழுத்தை மட்டும் உள்ளே வச்சுக்கலாமா? But this time instead of letting the camel draw its neck inside the tent, the Arab will take his whip out and 
thrash the animal till it apologizes. Eventually the camel would sleep completely outside the tent. அதாவது இம்முறை அரபி "சரி கழுத்தை உள்ளே இழுத்துக்கோ' எனச் சொல்லாமல் சாட்டையை எடுத்து விளாசி விடுவார். ஒட்டகம் அழுது கொண்டே மன்னிப்பு கேட்கும் வரை விளாசுவார். கடைசியில் அது இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றபடி வெளியே படுத்துக் கொள்ளும்.
புரொபஸர்: ரெண்டு கதையிலும் கடைசியாய் வரும் நிகழ்வை சொல்லும் போது 
ச்ண்ய்ஹப்ப்ஹ் அல்லது ங்ஸ்ங்ய்ற்ன்ஹப்ப்ஹ் பயன்படுத்துகிறாய். என்னால் வித்தியாசத்தை கண்டுணர முடியவில்லை.
கணேஷ்: எனக்கும் தான்.
ஜூலி: உங்க ரெண்டு பேருக்கும் மூளையில்லை. உற்று கவனிச்சீங்கன்னா வித்தியாசம் தெரியும்.
புரொபஸர்: சரி... என்னவென நீயே சொல்லு!
கணேஷ்: அதானே?
ஜூலி: முதல் சம்பவம் கடந்த காலத்தில் நடக்குது. அதனால் eventually. இரண்டாவது எதிர்காலத்தில் நடக்கிறது. அதனால் ங்ஸ்ங்ய்ற்ன்ஹப்ப்ஹ்
சர்வர்: கரெக்ட் ஜூலி. சூப்பர்.
புரொபஸர்: ஓ... புரிகிறது. நன்றி தம்பி. எப்படி உனக்கு இவ்வளவு விசயங்கள் தெரியுது? 
சர்வர்: உங்க பாராட்டுக்கு நன்றி. I feel humbled.
கணேஷ்: சார் expression என்றால் பணிவு என்று தானே பொருள். நீங்க பாராட்டினா இவருக்கு ஏன் பணிவு வரணும்?
புரொபஸர்: நல்ல கேள்வி. (சர்வரை நோக்கி) தம்பி நீயே பதில் சொல்றியா?
சர்வர்: இது நான் அடிக்கடி பயன்படுத்தற ஒரு ங்ஷ்ல்ழ்ங்ள்ள்ண்ர்ய். நீங்க சொல்றதை பணிவோட ஏத்துக்கிறேன் எனும் தொனியில் இதை பயன்படுத்துறேன். சரியா சார்?
புரொபஸர்: ஆமா. ஒருவர் நம்மைப் புகழும் போது நான் அப்புகழ்ச்சிக்கு தகுதியானவன் அல்ல என பொருள் தொனிக்க பணிவு காட்டுவதே I feel humbled.
கணேஷ்: நாம அதுக்கு தகுதியானவங்க இல்லீன்னா புகழ்கிறவன் என்ன முட்டாளா?
புரொபஸர்: தம்பி, பம்மல் கே சம்பந்தத்தில் கமல் சொல்வது போல அறிவுரை சொன்னா அனுபவிக்கணும் ஆராயக் கூடாது.
ஜூலி: கிரிக்கெட் வர்ணனையில் humbled என்கிற சொல்லை வேறு விதமா பயன்படுத்துவாங்க... கேட்டிருக்கீங்களா?

(இனியும் பேசுவோம்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.