புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள். அப்போது கணேஷ்
ஆங்கிலத்தின் வசைச்சொற்கள் பற்றி புரொபஸரிடம் வினவுகிறான். அவர் இச்சொற்கள் வரலாற்றின் தொடக்கத்தில் வசைச் சொற்களாக இருக்கவில்லை. ஆனால்
பின்னர் ஒடுக்கப்பட்ட சேரி மக்களை பழிக்கும் வண்ணம் இந்த வசைச்சொற்கள் எப்படி உருப்பெற்றன என விளக்குகிறார்.
புரொபஸர்: ஒன்றைக் கவனித்தாயா? இந்த ஆங்கில வசைச்சொற்கள் பெரும்பாலானவை நான்கு எழுத்திலானவை.
கணேஷ்: ஆமா நான் இப்போ தான் கவனிச்சேன்
புரொபஸர்: அதனால தான் இவற்றை our-letter words என்கிறோம். Four-letter words என்றாலே பாலியல் தொனி கொண்ட வசைச் சொற்கள் எனும் அர்த்தம்
தோன்றி விட்டது.
கணேஷ்: சார் நீங்க ஷெர்பர்ன் லேன் எனும் ஊரைப் பற்றிச் சொன்னீர்களே, அது போல வேறு ஊர்கள் இங்கிலாந்தில் உண்டா? ஷிட் எனும் வசைச் சொல்லை
பெயரில் கொண்ட ஊர்கள்?
புரொபஸர்: இங்கிலாந்தில் லிங்கன்ஷைர் எனும் கவுண்டியில் உள்ள கிராமம் Skidbrook. இங்குள்ள ஒரு கைவிடப்பட்ட தேவாலயம் St. Botolph's Church.
பதின்மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான ஆலயம் இது. இங்கு பேய் நடமாட்டம் உள்ளதாய் சர்ச்சை கிளம்பியது. இது ஒரு haunted church என சேதி
பரவியது. இதைத் தொடர்ந்து மக்கள் அங்கு வெள்ளமாய்க் குவிந்தனர்.
கணேஷ்: அதென்ன சார் haunted?
புரொபஸர்: பேய் பிசாசு குடியிருக்கும் இடத்தை haunted என்பார்கள். அதே போல நீ ஓர் இடத்துக்கு அடிக்கடி செல்கிறாய் என்றால்...
கணேஷ்: நான் அடிக்கடி போறதுன்னா என் வீட்டுக்குத் தான்...
புரொபஸர்: அதில்லடா, நாம தினமும் போற நம் இடத்தை அல்ல, நமதல்லாத வேறு இடங்கள்.
கணேஷ்: ஓ... கோட்டூர்புரம் நூலகம்?
புரொபஸர்: யெஸ்! Ganesh haunts Anna Centenary Library at Kotturpuram. அல்லது Ganesh frequents the library at Kotturpuram. உன்னைப் போல நிறைய
வாசகர்களும், எழுத்தாளர்களும் அங்கு தொடர்ந்து வருகிறார்கள் என்றால்...
கணேஷ்: அப்படி யாருமே இல்ல. ஏழெட்டு பேர் வந்தால் அதிகம்.
புரொபஸர்: சரி இருக்கட்டுமே. ஒருவேளை நிறைய படைப்பாளிகளும் வாசகர்களும் தினமும் வருகிறார்கள் என்றால் The library at Kotturpuram is a favorite
haunt of writers and readers in Tamil. அங்கு நீ ஓர் அழகிய பெண்ணை சந்தித்து நட்பாகிறாய். உங்கள் நட்பு வளர்ந்து காதலாகிறது.
கணேஷ்: மகிழ்ச்சி...
புரொபஸர்: ஆனால்...
கணேஷ்: ஆனால் தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை
புரொபஸர்: ஆனால் அந்த பெண் ஒருநாள் தற்கொலை செய்து கொள்கிறாள். உனக்கு நூலகத்துக்கு பின்னர் சென்றாலே அவளது ஞாபகம் வருகிறது. எங்கு
போனாலும் அவளது முகம் அங்கு உன்னைத் துரத்துகிறது. அப்படி என்றால் Her face haunts you whatever place you visit in the library. இப்படி நம்மால் மறக்க
முடியாத ஒரு கொடிய நினைவைக் குறிப்பிடவும் நாம் haunt என்ற வினைச்சொல்லை பயன்படுத்தலாம்.
கணேஷ்: சார்... அந்த தேவாலய பேயோட கதை?
புரொபஸர்: ஓ... அதுவா? அங்கு பேய் உலாவுகிறது எனும் பீதி பரவ பொதுமக்கள் வந்து அந்த ஆலயத்தை vandalise செய்கிறார்கள். இந்த சர்ச்சை பற்றி ஒரு
காட்சித் தொகுப்பை நேற்று பிபிசியில் பார்த்தேன்.
கணேஷ்: சார் அதென்ன வேண்டலைஸ்?
புரொபஸர்: பொதுச்சொத்துக்கோ தனியார் சொத்துக்கோ வேண்டுமென்றே சேதம் விளைவிப்பது. இப்படி சேதம் விளைவிப்பவர்களே vandals. இந்த பெயரில்
நிஜமாகவே ஒரு சமூகம் வாழ்ந்தது தெரியுமா?
கணேஷ்: அப்படியா?
புரொபஸர்: ஆமாம். வேண்டல்கள் என்பவர்கள் ஒரு கிழக்கு ஜெர்மானிய சமூகம். இவர்கள் தம் சொந்த நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பால் குடிபெயர்ந்து புதுதேசங்களுக்குப் படையெடுத்தனர். முதலில் ரோம சாம்ராஜ்யத்தின் கீழுள்ள ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமித்த இவர்கள் கி.பி 455 - இல் ரோம சாம்ராஜ்ஜியத்தை படையெடுத்து அழித்தனர். இதனால் கடும் அழிவுகளை ஏற்படுத்துபவர்கள் என வரலாற்றாசிரியர்கள் இவர்களைச் சித்திரித்தனர். Vandals என்றாலே ஊரை சேதப்படுத்துபவர்கள் என்ற பெயர் ஏற்பட்டு vandal என்ற பெயர்ச்சொல் ஆங்கிலத்தில் ஏற்பட்டது. Vandalise என்ற வினைச்சொல்லும் அதில் இருந்து தோன்றியது.
கணேஷ்: சரி... அந்த ஆலயம் பற்றி ஏன் சொன்னீர்கள்?
புரொபஸர்: அந்த ஆலயம் உள்ள Skidbrook என்ற கிராமத்தின் பெயரில் ஒரு வசைச்சொல் ஒளிந்துள்ளது. அதற்குத் தான்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎம் கட்சிக்கு 5 இடங்கள்!

இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா அதிரடியில் மிரட்டுவார்: அஸ்வின்

அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்? நாளை மாவட்ட செயலர்கள் கூட்டம்!

கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்: அக்ஷர் படேல்
வீடியோக்கள்
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

